டுவிட்டரில் அறிமுகம் ஆகவுள்ள புதிய வசதி...

டுவிட்டரில் அறிமுகம் ஆகவுள்ள புதிய வசதி...



இன்று இணையதள உலகில் உள்ள சமூக வலைதளங்களில் அதிக மக்கள் டுவிட்டரை பயன்படுத்திவருகின்றனர். உலகில் நடைபெற்று வரும் முக்கிய கருத்துகளை குறித்து விவாசித்து வருகின்றனர். இதில் டிரெண்டிங் ஆகும் ஹேஸ்டேக் அனைவராலும் உன்னிப்பாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், டுவிட்டரில் 24 மணிநேரங்களில் தானாகவே மறையும் புதிய வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக டுவிட்டர் தரப்பு தெரிவித்துள்ளது.

இத்தாலி ,பிரேசில் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் இவ்வசதி பரிசோதிக்கப்படவுள்ளதாக தெரிகிறது. ஃப்ளீட்ஸ் பீச்சர் என்று அழைக்கப்படும் இந்த வசதியை பயனாளர்கள் தேர்வு செய்தால் அடுத்த 24 மணிநேரத்திற்குப் பின் அது தானாகவே மறைவும். ரீடிவிட், லைக், பின்னூட்டம் என அனைத்தும் மறையும்., ஸ்னாப்சாட் செயலியின் ஸ்டோரீஸ் வசதியைப் பார்த்து இது வடிவமைக்கபட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த வசதியை டுவிட்டர் செயலியை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே வழங்கபடுவதாகவும், இணையதளத்தில் டுவிட்டர் பயன்படுத்துபவர்களால் இதைப் பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது




Recent Posts

Total Pageviews

Code

Blog Archive