இனி பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும்தான்! NCERT அறிக்கை பட்டியல் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, June 11, 2020

இனி பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும்தான்! NCERT அறிக்கை பட்டியல்

நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்துக் கொண்டே வரும் வேளையில், மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டவுடன் செயல்படுத்தப்படும் வழிகாட்டுதல்களின் தற்காலிக பட்டியலை என்.சி.இ.ஆர்.டி சமர்ப்பித்துள்ளது.

என்.சி.இ.ஆர்.டி சமர்ப்பித்துள்ள அறிக்கையின் படி, பள்ளி திறந்தவுடன் ஒரு வகுப்பின் மாணவர்கள் ஒன்றாகப் பள்ளிக்கு அழைக்கப்பட மாட்டார்கள். வாரத்தில் மூன்று நாட்கள் 'ஆட்' & 'ஈவன்' நம்பர் பார்முலா முறையில், ரோல் நம்பரின் படி இரண்டு ஷிப்ட்களாக வகுப்புகள் செயல்படும்.முதலாவதாக 'ஆட்' நம்பரில் இருக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும். இரண்டாவதாக   'ஈவன்' நம்பரில் இருக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும்.இதில், ஒவ்வொரு வகுப்புகளுக்கு ஏற்ப தலா 10 நிமிடங்கள் இடைவெளி கொடுக்க வேண்டும்.சமூக இடைவெளியை பின்பற்ற, திறந்த வெளியில் வகுப்புகளை நடத்துவது நல்லது என்றும் தன் அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது என்.சி.இ.ஆர்.டி.

6 கட்டங்களாக திறக்கப்படும் பள்ளிகள்:

முதல் கட்டமாக 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் தொடங்கப்படும், ஒரு வாரம் கழித்து இரண்டாம் கட்டமாக 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும், 2 வாரம் கழித்து மூன்றாம் கட்டமாக 6வது முதல் 8ஆம் வகுப்பு வரைவுள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும்.நான்காம் கட்டமாக, மூன்று வாரம் கழித்து, மூன்றாம் வகுப்பு முதல் 5வது வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும். 5ஆம் கட்டமாக, 4 வாரம் கழித்து 1வது மற்றும் 2வது வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளது.5 வாரம் கழித்து, அதாவது 6து கட்டத்தில், மழலையர்பள்ளி பள்ளிகள் மற்றும் எல்.கே.ஜி மாணவர்களுக்கு பெற்றோர்களின் சம்மதத்துடன் வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் பின்பற்றப்படும் நடவடிக்கைகள் :

* ஒரு வகுப்பில் 30 முதல் 35 மாணவர்கள் வரை தான் இருக்க வேண்டும், கட்டாயம் மாணவர்களுக்கு இடையே வகுப்பறையில் 4 அடி இடைவெளி இருக்க வேண்டும்.

* வகுப்பறையில், ஜன்னல்கள் மற்றும் கதவுகள் திறந்து வைக்கப்பட வேண்டும்.

* ஏ.சி போடுவதற்கு அனுமதிக்கக் கூடாது. ஒரு மாணவர் அமரும் நாற்காலியில், வேறோரு மாணவர் அமரக்கூடாது.

* மாணவர்கள் தினமும் ஒரே நாற்காலியில் தான் அமர வேண்டும்.

* வகுப்புகள் தொடங்கிய பின் 15 நாட்களுக்கு ஒரு முறை குழந்தையின் முன்னேற்றம் தொடர்பாக பெற்றோர்களிடம் பேச வேண்டும்.

* பள்ளி நிர்வாகம், வகுப்பறைகள் கிருமி நாசினி கொண்டு தினமும் சுத்தம் செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

* மாணவர்களும், ஆசிரியர்களும் பள்ளிக்குள் நுழைவதற்கு முன் ஒரு முறை உடல் வெப்பம் அனைத்தும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

* மேலும், பெண், பென்சில், உணவு உள்ளிட்டவற்றை மாணவர்கள் பகிர்ந்து கொள்ளக்கூடாது.

* ஒவ்வோருவரும் தனியாக தண்ணீர் கேன் கொண்டு வர வேண்டும்.

* முகக் கவசம் அணிவது கட்டாயமான ஒன்று.

* அதேபோல், மருத்துவத் துறையில் மற்றும் பாதுகாப்புப் பணியில் வேலை செய்யும் பெற்றோர்கள் முன்கூட்டியே அதனைப் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்திருக்க வேண்டும்.

* தொலைப்பேசியில் தொடர்பு கொள்ள முடியாத பெற்றோர்கள் மட்டுமே ஆசிரியர்களைக் காண அனுமதிக்கப்படுவார்கள்.

* பள்ளிகளில் ஒருபோதும் ஆசிரியர்களுடன் எந்த விதமான சந்திப்பும் பெற்றோர்களுக்கு ஏற்பாடு செய்யப்படாது.

* விடுதியைப் பொருத்தவரை, 6 அடி இடைவெளியில் தான் மாணவர்களின் படுக்கைகள் இருக்க வேண்டும்.

Post Top Ad