மாணவர்களுக்கு மன உளைச்சல்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்க- ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்
கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் சூழலில் பொதுத்தேர்வை எதிர்நோக்கியுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்கள் மன உளைச்சலில் இருப்பதால் தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என அரசாணை வெளியிடவேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளதுஇதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்திதொடர்பாளர் முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் சூழலில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவர்கள் மனஉளைச்சலில் உள்ளனர்.பெற்றோரும் மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்து அச்சத்தில் உள்ளனர். இந்த அசாதாரண சூழ்நிலை சீராக இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் என மத்தியசுகாதார மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதை கருத்தில்கொண்டு தமிழக அரசு மாணவர்களின் எதிர்காலம் கருதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசாணை வெளியிடவேண்டும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







ஊரடங்கு காலத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக நெட் உள்ளிட்ட அனைத்து என்.டி.ஏ. (தேசிய தேர்வுகள் முகமை) தேர்வுகளுக்கும் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அதனால் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல, பணிகள் தொடங்கிய பிறகு தேர்வு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிபிஎஸ்இயை பொறுத்தவரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகுதான் ஆலோசிக்கப் போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில் ஏப்ரல் இறுதி அல்லது மே மாதத்தில் தேர்வு நடத்தலாம் என்று முடிவு எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.








சுவாசம் சீராக இருந்தால் நோய்கள் நம்மை அணுகாது. ஒரு சிலருக்கு சுவாசம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன. சுவாச காசம் மற்றும் இதர நுரையீரல் நோய்கள் தீர சிறுகுறிஞ்சான் வேர்த்தூள் ஒரு சிட்டிகை மற்றும் சுக்கு, மிளகு, திப்பிலி கலந்து தயாரித்த தூள் திரி கடுகு சூரணம் ஒரு சிட்டிகை கலந்து வாயில் போட்டு, வெந்நீர் குடித்து வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து காலை, மாலை வேளைகளில் 7 நாட்கள் வரை செய்ய நல்ல குணம் தெரியும்.
புன்னை தாது அழுகல் போக்கியாகவும், உடல் இசைவு நீக்கியாகவும், நாடி நடையை உயர்த்தி உடல் வெப்பு தரும் மருந்தாகவும் பயன்படும். இது சளி, ஒற்றைத் தலைவலி, தலைசுற்றல் கண் எரிச்சல், வாத நோய், தோல் வியாதி, வயிற்றுப் புண், வெட்டை, மேகப்புண், சொறி சிரங்கு குஷ்டம் ஆகியவைகளைக் குணப்படுத்தும்.பூவை அரைத்துச் சிரங்கிற்குப் போடலாம். இலையை ஊரவைத நீரில் குளித்து வர மேகரணம், சொறி, சிரங்கு யாவும் மறையும். பூவை நிழலில் உலர்த்தித் தூள் செய்து ஒரு சிட்டிகை காலை, மாலை கொடுத்து வர டைபாய்டு தீரும்.புன்னை எண்ணெய் பூசி வர மகாவாத ரோகம் முன் இசைவு, பின் இசைவு, கிருமி ரணம் சொறி சிரங்கு, குட்டரோகப் புண்கள் தீரும்.


சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் வேலைக்கு செல்ல இயலாத ரேஷன் அட்டைதாரருக்கு தமிழக அரசு ரூ 1000 நிதியுதவியை வழங்குவதாக அறிவித்துள்ளது. அந்த பணத்தை பெற யாரெல்லாம் தகுதியானவர்கள் என்பதை பார்ப்போம்.

நீங்கள் ஒரு ஜியோ பயனரா? உங்கள் ஜியோ எண்ணிற்கு ATM மெஷின் மூலம் ரீசார்ஜ் செய்வது எப்படி என்று தெரியுமா?


