உங்கள் வீட்டில் பணம் தங்கவில்லையா? அதற்கு இதுதான் காரணம்!

உங்கள் வீட்டில் பணம் தங்கவில்லையா? அதற்கு இதுதான் காரணம்!


ஒருவரது வீட்டில் செல்வம் நிலைக்காமல் இருக்கிறது என்றால், அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் விஷயங்கள் உள்ளது என்று வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகின்றது.

வாஸ்து சாஸ்திரம் கூறுவதை போல நமது வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும்படி, இருக்கும் அந்த தவறான செயல்பாடுகள் என்ன தெரியுமா?

நமது வீட்டு பூஜை அறையில் இரண்டு கடவுள் சிலைகளை எதிரெதிரே வைக்கக் கூடாது. ஏனெனில் இதனால் நமது வீட்டில் செலவுகள் அதிகரித்து, வருமானம் குறைந்துவிடும்.

வீட்டில் உடைந்த கண்ணாடி அல்லது வேறு கண்ணாடி பொருட்கள் மற்றும் விரிசல் அடைந்த கண்ணாடி ஆகியவற்றை வைத்திருக்கக் கூடாது. ஏனெனில் இவைகள் நமது வீட்டில் நிதி சிக்கல்களை ஏற்படுத்தும்.

உடைந்த சாமி சிலைகள் அல்லது கடவுளின் கிழிந்த போட்டோக்கள் இது போன்று வீட்டினுள் வைத்திருக்கக் கூடாது. என்னெனில் இவைகள் பொருளாதார பிரச்சனைகளை உண்டாக்கும்.

முள்கள் இருக்கும் செடிகளை வீட்டினுள் வைத்து வளர்க்காமல், வீட்டின் வெளியில் வைக்க வேண்டும். ஏனெனில் இது நமது வீட்டில் பணப் பற்றாக்குறையை ஏற்படுத்தும்.

நமது வீட்டில் ஏதேனும் எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதடைந்த நிலையில் இருந்தால், அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும். ஏனெனில் அவை நமது வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை உண்டாக்குகிறது.

நமது வீட்டில் பயன்படாத கடிகாரத்தை சுவற்றில் தொங்க விடாமல் அதை வெளியில் போட்டு விட வேண்டும். ஏனெனில் அந்த கடிகாரமானது நமது வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை அதிகரித்து, செல்வ வளத்தைப் பாதிக்கச் செய்கிறது.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive