ஒரே நாடு, ஒரே மின் திட்டம்': மலிவு விலையில் மின்சாரம் சாத்தியம்!!

ஒரே நாடு, ஒரே மின் திட்டம்': மலிவு விலையில் மின்சாரம் சாத்தியம்!!




'ஒரே நாடு, ஒரே மின் திட்டம்' நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என பட்ஜெட் தாக்கலில் இடம்பெற்றிருப்பதால், மலிவு விலையில் மின்சாரம் கிடைக்கும் என கூறப்படுகிறது. மக்களவையில் நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது அவர் ஒரே நாடு, ஒரே மின் தொகுப்பு திட்டம் அமலாக்கப்படும் என அறிவித்தார். 



இது பற்றிய அறிவிப்பில், மின் இணைப்பை ஒரே நாடு, ஒரே மிந்தொகுப்பு என உருவாக்க உள்ளதாகவும், மேலும் இந்த திட்டத்தால் மலிவு விலையில் மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்கிறதென்றும் நிர்மலா சீதாராமன் கூறினார். மேலும் அவர், கியாஸ் மின் தொகுப்பு, நீர் மின் தொகுப்பு, மின்னணு பாதை உள்ளிட்ட திட்டங்களை இந்த ஆண்டு தயாரிக்க உள்ளதாகவும் கூறினார். 



தற்போது தமிழகத்தில் 100 யூனிட் மின்சாரத்திற்குள் பயன்படுத்தினால் கட்டணம் செலுத்த தேவையில்லை எனவும், 101 யூனிட்டிலிருந்து மின் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் 2017 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive