கூட்டுறவு வங்கிகளில் தனிநபர் நகை கடன் ரூ.20 லட்சமாக உயர்வு: அமைச்சர் செல்லூர் ராஜு
தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் தனிநபர் நகை கடன் ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு சட்டமன்றத்தில் தெரிவித்தார். தமிழக சட்டமன்றத்தில் நேற்று கூட்டுறவு துறை மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றது. கூட்டுறவு, உணவு துறை மானியக்கோரிக்கை விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் தனிநபர் நகை கடன் தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.10 லட்சம் ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார். தமிழகத்தில் உள்ள கூட்டுறவுஅமைப்புகள்தான் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளதாகவும், கடந்த, 2011-ம் ஆண்டு முதல் கடந்த மாதம் 22-ம் தேதிவரை 82 லட்சத்து 7,234 விவசாயிகளுக்கு ரூ.42 ஆயிரத்து 152 கோடியே 38 லட்சத்துக்கு வட்டியில்லா பயிர் கடன் வழங்கியுள்ளது. மத்திய கூட்டுறவு வங்கிகளின், 248 கிளைகள் உட்பட 622 கூட்டுறவு நிறுவனங்களை ரூ.72 கோடியே 86 லட்சம் செலவில் குளிர் சாதன வசதியுடன், நவீனமயமாக்கியுள்ளது.
0 Comments:
Post a Comment