அதிகரிப்பு! அரசு மருத்துவ கல்லூரியில் 'சீட்'...மண்ணின் மைந்தர்கள் மகிழ்ச்சி 

அதிகரிப்பு! அரசு மருத்துவ கல்லூரியில் 'சீட்'...மண்ணின் மைந்தர்கள் மகிழ்ச்சி 


பொது பிரிவில் உள்ள எஸ்.சி., ஓ.பி.சி., எம்.பி.,சி., ஏழை எளிய மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்தும் அவர்கள் விரும்பும் கல்வியை பெறமுடியாமல் பாதிக்கபடுகின்றனர். பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மாணவர்கள் கல்வி கண் திறக்கும் விதமாக 10-சதவீத இடஓதுக்கீடு செய்திட மத்திய அரசு சட்ட திருத்தம் செய்த, இ.டபுள்யு.எஸ்., (Economically Weaker Section)விதியை அமல்படுத்தியது.இந்த 'சீட்' அதிகரிப்பு பட்டியலில் புதுச்சேரி மாநிலம் இடம் பெறவில்லை. இதனால் அரசு மருத்துவ கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., 'சீட்' 10 சதவீதம் அதிகரித்து கொள்ளும் பொன்னான வாய்ப்பு பறிபோனது.

இதற்கிடையில் மத்திய அரசு, மருத்துவக் கல்லுாரிகளில் சீட்டுகளை அதிகரித்து கொள்ளுவதற்கான காலக்கெடுவை கடந்த 28 ம் தேதி வரை நீட்டித்து அனைத்த மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. ஏற்கனவே புதுச்சேரி அரசு விண்ணப்பித்து இருந்ததால் இரண்டாவது சீட் அதிகரிப்பு பட்டியலில் புதுச்சேரி இடம் பெற்றது.இரண்டாவது வாய்ப்பில் விண்ணப்பித்த டில்லி, குஜராத், உத்திரபிரதேசம், பஞ்சாப், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் அரசு மருத்துவ கல்லுாரிகளின் சீட் அதிகரிப்பு தொடர்பாக அண்மையில் விவாதக்கப்பட்டது. 

நீண்ட விவாதித்திற்கு பின் புதுச்சேரி அரசு மருத்துவ கல்லுாரியில் தற்போதுள்ள 150 எம்.பி.பி.எஸ்., 'சீட்"களை 180 ஆக அதிகரித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இது பொருளாதாரத்தில் பின் தங்கிய புதுச்சேரி மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தகுதி என்ன பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மாணவர்கள் வருமானம், சொத்து மதிப்பீடு உள்ளிடங்கிய சான்றிதழை வாங்கி விண்ணப்பித்தால் மட்டுமே இப்பிரிவின் கீழ் 'சீட்' பெற முடியும். 

இதற்கான பிரத்யக படிவத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இப்பிரிவின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாயிற்குள் இருக்க வேண்டும். விவசாய நிலம் 5 ஏக்கருக்கு குறைவாகவும், வீட்டு மனை 1000 சதுர அடிக்கு குறைவாக இருக்க வேண்டும்தெளிவுப்படுத்தப்படுமாபுதுச்சேரி மாநிலத்தில் கடந்த 1 ம் தேதி முதல் கல்விக்கான குடியிருப்பு, குடியுரிமை, ஜாதி, சான்றிதழ்கள் அனைத்தும் மின்னணு மாவட்டத்தின் கீழ் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதே வேளையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் தற்போது சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ள வருமானம் சொத்து மதிப்பீடு சான்றிதழ் எந்த வகையில் தரப்படும் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.நேரில், வருவாய் துறை அதிகாரிகளை அணுகி பெற வேண்டுமா அல்லது ஆன்-லைனில் வருமானம், சொத்து மதிப்பீடு சான்றிதழ் பெற வேண்டுமா என்று தெரியாமல் மாணவர்கள், பெற்றோர்கள் விண்ணப்பிக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளனர். இது குறித்து தெளிவான முடிவினை வருவாய் துறை மற்றும் சென்டாக் அதிகாரிகள் தெளிவுப்படுத்த வேண்டும்





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive