ஒருங்கிணைந்த பள்ளி என்பது தொடக்கக்கல்விக்கு வரமா? துயரமா? - முனைவர் மணி கணேசன்

ஒருங்கிணைந்த பள்ளி என்பது தொடக்கக்கல்விக்கு வரமா? துயரமா? - முனைவர் மணி கணேசன்


அண்மைக் காலமாகத் தமிழக அரசின் தொடர்ச்சியான தொடக்கக்கல்வித் துறை சார்ந்த அறிவிப்புகள் பல்வேறு சீரழிவுகளுக்கு அடிகோலுவதாக இருக்கின்றது. அரசுப்பள்ளிகளைக் காக்கும் முயற்சிகளும் அதனூடாக வழங்கும் நலத்திட்ட உதவிகளும் பொதுப் பார்வைக்கு நல்ல முன்னெடுப்புகளாக, பாராட்டத்தக்க நடவடிக்கைகளாகக் காட்சித் தந்தாலும் உண்மை நிலை பல்வேறு கசப்புகளைப் பறைசாற்றவனவாக உள்ளன. 


கொல்லைப்புறமாகத் தனியார் பள்ளிகள் மீதான நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களிடையே காணப்படும் மோகத்தைப் பயன்படுத்தி, ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான அரசுப்பள்ளி மாணவர்களைத் தாரைவார்த்து அதற்கு உரிய கொள்ளைக் கட்டணத்தையும் பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து வாரி வழங்கி வருவது கூர்ந்து நோக்கத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த அரசுப்பள்ளிகள் ஒழிப்பு நடவடிக்கைகளை அரசு விடாப்பிடியாக மேற்கொண்டு வருவது மிகவும் க நுட்பமாகவும் துரிதமாகவும் செயல்படுத்தி வருவதைக் கவனத்தில் கொள்வது நல்லது.

வெளிப்பார்வைக்கு அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை பெருமளவில் வீழ்ச்சி என்றும் குழந்தை உளவியல் அடிப்படையில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் அல்லது இருபது குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்னும் தொன்றுதொட்டு இருந்து வரும் நடைமுறைகளை நசுக்கி உரிய ஆசிரியர் பணியிடங்களை உபரிப் பணியிடங்களாக உருமாற்றிக் காட்டி தம் விருப்பத்திற்கேற்ப கட்டாய மாறுதல் வழங்கி நீலிக் கண்ணீர் வடிப்பது அண்மைக்காலத் தொடர்கதை ஆகிவிட்டது வருந்தத்தக்கது.

உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில உபரி பட்டதாரி ஆசிரியர்கள் அவரவர் கூடுதல் உயர் கல்வித்தகுதிக்கேற்ப முதுகலை ஆசிரியர்களாகப் பணியிட மாற்றம் பெறும் அதே சூழலில், அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் தகுதிக் குறைக்கப்பட்டு புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கும் அங்கன்வாடிப் பள்ளிகளின் பயிற்றுநர்களாகப் பணியாற்ற வலியுறுத்துவது என்பது அநீதியாகும். 

பல பள்ளிகளுக்குக் குறித்த, குறிப்பிட்ட காலத்திற்குள் போய்ச் சேரவே முடியாத நிலை இன்றும் உள்ளது. போதிய வாகன வசதிகளும் போக்குவரத்து வசதிகளும் இல்லாத குக்கிராமங்கள் தமிழ்நாட்டில் நிறைய காணக் கிடைக்கின்றன. தகவல் தொழில்நுட்ப வசதிகள் இல்லாத பரிதாப நிலையில் இணையவழியிலான பள்ளி, மாணவர் மற்றும் ஆசிரியர்கள் வருகை சார்ந்த பதிவுகளைப் பதியச் சொல்லிக் குரல்வளை நெரிப்பது எந்த வகையில் நியாயம்? அரசு இதற்கென எந்தவொரு வசதியும் நிதியும் வழங்காத நிலையில் அப்பாவி ஆசிரியர்கள் மீது அதிகார சாட்டையைச் சுழற்றுவது என்பது சரியல்ல. 

மேலும், இரட்டைச் சவாரி செய்வது போன்று சற்றேறக்குறைய 100க்கு மேற்பட்ட பதிவேடுகளைத் தொடர்ந்து பராமரிக்கச் செய்வதும் அதே பதிவுகளைக் கல்வித் தகவல் மேலாண்மைத் தொகுப்பு (EMIS) எனும் இணையவழியில் போதிய கால அவகாசம் வழங்கப்படாமல் அனைத்தையும் உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்துவதும் ஆசிரியர்களுக்கு மிகுந்த மனச் சோர்வையும் மன அழுத்தத்தையும் அளிப்பதாக உள்ளன. மன அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் மன நிறைவுடனும் ஆசிரியர்கள் தம் கற்பித்தல் நிகழ்வுகளை மாணவர்களிடையே நிகழ்த்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டது தான் உண்மை. அரக்கப்பரக்க செய்ய பாடப்பொருள்கள் ஒன்றும் துரித உணவுகள் அல்ல. கற்றல் என்பது ஒரு பூ மெல்ல மலருவதுபோல் நிகழும் அற்புத நிகழ்வாகும். மாணவர்கள் கற்றல் அடைவில் மாணவர்களின் நல்ல உற்சாக மனநிலை மட்டும் இருந்தால் போதாது. ஆசிரியரிடையே ஊக்கமும் தன் முனைப்பும் அமைதியான அகச்சூழலும் நிலவுவது இன்றியமையாதது. இத்தனை அலைக்கழிப்புக்கிடையில் எந்தவொரு ஆசிரியரின் கற்பித்தல் திறன் மேலோங்கும்? 

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் அண்மையில் அரசுக்கு எதிராக நடந்து முடிந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்குப் பிறகு, ஆட்சியாளர்களும் நிர்வாக அலுவலர்களும் ஆசிரியர்களைப் பழிவாங்கும் நோக்கில் அவர்களின் சிந்தனைகளை முடக்கும் பொருட்டு எப்போதும் ஒருவித நீண்ட நெடிய பயத்துடன் கூடிய பரபரப்புடன் வைத்திருப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர் போலும்! அடிப்படை உரிமைக்காகக் குரல் கொடுப்பதும் நியாயமான முறையில் போராடுவதும் தவறென்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் எடுத்துரைக்கவில்லை. ஆசிரியர்களை வீதிக்கு போராட வரவழைப்பதென்பது இழுக்கான செயலாகும். 

எல்லாவற்றிற்கும் போராடுவது ஆசிரியர்களின் வேலையுமல்ல. சமுதாய சிற்பிகளான ஆசிரியப் பெருமக்களை இழித்தும் பழித்தும் பேசுவதென்பது நல்லறமாகா.  ஊதியத்தில் பெரும் இழப்புகளையும் முரண்பாடுகளையும் செயற்கையாகத் தோற்றுவிப்பதும் தகுதிக்குக் கீழான பணிகளைச் செய்ய அறிவுறுத்துவதும் நடுவுநிலையுடன் நோக்கத்தக்கது ஆகும். இதுபோன்ற மனவேதனைகளுடன் வகுப்பறையில் நுழையும்  ஆசிரியரால் எங்ஙனம் நல்ல கற்பித்தலை வழங்க இயலும்? ஒவ்வொரு ஆசிரியர் முன்பும் இருப்பது இந்த நாட்டின் உயிர்! இதை ஆட்சியாளர்கள் உணர்ந்து செயல்படுகிறார்களோ இல்லையோ ஆசிரியர்கள் தம் துன்பங்கள் அனைத்தையும் மனத்திற்குள் ஆழப் புதைத்துக்கொண்டு மிச்சமிருக்கும் உயிரையும் உணர்வையும் கொண்டு உலகம் வியக்கத்தக்க வகையில் நல்ல தரமான கல்வியை முன்னெடுத்துச் செல்கின்றனர். இது பாராட்டத்தக்கது.

இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிவரும் கொடுந்துயரமிக்க இச்சூழலில் மீண்டும் மீண்டும் வெந்தப் புண்ணில் கூர்வேல் பாய்ச்சி உழற்றுவதுபோல் தொடக்கக்கல்வித் துறை ஒழிப்பு நடவடிக்கைகள் காணப்படுகின்றன. தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்குக் கொத்தடிமை நிலையிலிருந்து விடுதலை அளித்தது எம்.ஜி.ஆர் ஆவார். அதேபோல், பெரியண்ணன் மாதிரி ஒட்டுமொத்த அதிகாரங்களையும் தன்னகத்தே குவித்து வைத்துக்கொண்டு கோலோச்சிக் கிடந்த பள்ளிக்கல்வித்துறையை, நிர்வாக வசதிக்காகவும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நலனுக்காகவும் ஒன்று முதல் எட்டு வகுப்புகள் முடிய உள்ள பள்ளிகளை நிர்வகிக்கும் பொருட்டு தொடக்கக்கல்வித்துறைத் தோற்றுவித்தது அன்று அம்மா வழியில் நடந்த அரசாகும். இந்த கடந்த கால வரலாறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டியது கடமையாகும். 

அத்தகைய பாரம்பரிய மிக்க தொடக்கக்கல்வித் துறையினை ஏதோ எடுத்தோம் கவிழ்த்தோம் என்று விட்டுவிடவோ, உரிமைகள் அனைத்தையும் பறிகொடுத்துவிட்டு நடைபிணமாகவோ இருக்க முடியாது. கேட்க நாதியற்றுப் போன தொடக்கக்கல்வித் துறையின்கீழ் பல்லாண்டுகளாகப் பணிபுரிந்து வரும் பட்டதாரி தலைமை ஆசிரியர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களைப் பள்ளி இணைப்பு என்னும் பெயரில் அப்பணியிடங்களில் பணிபுரிவோரைத் தகுதிக் குறைத்து அப்பள்ளியின் ஏனைய ஆசிரியர்களுள் இவர்கள் மூத்த ஆசிரியர்கள் என்று தரம்தாழ்த்துவது என்பது சகிப்பதற்கில்லை. இக்கேலிக்கூத்து மிக்க இந்நடவடிக்கைகளால் பள்ளி நிர்வாகச் சூழல் முற்றிலும் சீர்குலையும். 

காட்டாக, ஒருங்கிணைந்த பள்ளி வளாகம் என்பதில் ஒரே வளாகத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளுடன் தனித்துவத்துடன் தனியொரு நிர்வாகத்துடன் அதாவது தொடக்கக்கல்வித் துறையின்கீழ் இயங்கி வரும் தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளைக் கட்டாய ஒருங்கிணைப்பு மேற்கொண்டு இணைத்து ஒட்டுமொத்த பள்ளிக்கும் ஒற்றைத் தலைமையாசிரியரே நிர்வாகத் தலைவராகச் செயல்படுவார் என்பது வரவேற்கத்தக்கதாகத் தோன்றும். அதேவேளையில், அத் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர் பணியிடங்களை ஒழிக்க முயல்வதென்பது சரியல்ல. ஏனெனில், தலைமையாசிரியர் பதவி என்பது ஓர் அடையாளம்; அங்கீகாரம்; பதவி உயர்வு; தனி ஊதிய விகிதம் என பல பரிமாணங்களைக் கொண்டது. நேற்று வரை அதே பள்ளியில் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைத் திறம்பட நிர்வாகம் புரிந்து வந்த நிலையில் திமிங்கலங்கள் உயிர் வாழ சிறு மீன்கள் மாண்ட கதையாக இன்று முதற்கொண்டு அதே பள்ளியில் பதவியிழந்து கைக்கட்டி வாய்ப்பொத்தி ஒரு மூன்றாம் மனிதராக மூத்த ஆசிரியர் எனும் உப்புச்சப்பில்லாத திடீர் பதவியுடன் பதவியிழக்கச் செய்து வேடிக்கைப் பார்ப்பது என்பது ஆசிரியர்கள் விரோதப்போக்காகும். 

தாம் நிர்வகித்துக் கொண்டிருக்கும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பல்வேறு சிரமங்களையும் இன்னல்களையும் இடையூறுகளையும் ஆண்டுதோறும் பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் அதிகரிக்க தொடர்ந்து போராடிவரும் சூழலிலும் மன அழுத்தத்திலும் மேலும் ஒரு கூடுதல் பணிச்சுமை என்பது தலைவலியாகத்தான் அமையும். பெரு நிர்வாகங்களை நிர்வாக வசதி கருதி சிறு மற்றும் குறு அலகுகளாகப் பிரித்து நல்ல நிர்வாக நடைமுறைகளை மேம்படுத்தி வரும் இச்சூழலில் இருவேறு துறைகளாகச் செயல்பட்டு வந்த பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வித் துறைகளை ஏதோ சில பல காரணங்களை முன்வைத்து மீண்டும் ஒருங்கிணைப்பது என்பது பல்வேறு நிர்வாகக் குளறுபடிகளுக்கும் சீர்கேடுகளுக்கும் வழிவகுக்கும். 

மேலும், பல்வேறு காரணங்களை முன்வைத்து பள்ளிகள் ஒருங்கிணைப்பு என்பது காலத்தின் கட்டாயம் என நிர்ப்பந்தம் செய்யும் நிலையில், தகுதிக் குறைப்புக்கு ஆளான தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அவர்களின் கூடுதல் உயர்கல்வித் தகுதியை அடிப்படையாகக் கொண்டும் முதன்முதலில் பணியில் சேர்ந்த நாளையே முன்னுரிமையாகக் கொண்டும் பட்டதாரி நிலைக்குத் தரம் உயர்த்தியோ அல்லது அதே நிலையில் தொடரச் செய்வதே உத்தமம். அதுபோல, நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தகுதிக் குறைக்கப்படும் பட்டதாரி தலைமையாசிரியர்களை மேற்குறிப்பிட்ட வகையில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் அல்லது ஒருங்கிணைந்த பள்ளியின்  உதவித் தலைமையாசிரியர் என்று பணியிடங்கள் ஊதிய விகிதம் மாறாமல் உருவாக்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் அத்தகையோரைத் தகுதிக் குறைப்புக்கு ஆளாக்கப் பள்ளிக் கல்வித்துறை முயற்சிக்கக் கூடாது. ஈடுசெய்ய முடியாத இழப்புகளுக்கும் மனக் காயங்களுக்கும் குறைந்த பட்ச மனிதாபிமானத்துடன் தொடக்கக்கல்வித்துறையைக் கபளீகரம் செய்ய நினைக்கும் பள்ளிக்கல்வித்துறை அலகு திறந்த மனத்துடன் சில சலுகைகளையும் நிவாரணங்களையும் வழங்கிட தாமாக முன்வருதல் சாலச்சிறந்தது. 'நீ அரிசி கொண்டு வா; நான் உமி கொண்டு வருகிறேன். இருவரும் ஊதிஊதி சமமாகச் சாப்பிடலாம்' என்று நினைப்பது நல்ல நடைமுறை ஆகாது. குறிப்பாக, தொடக்கக்கல்வித் துறை மீதான பள்ளிக் கல்வித்துறையின் அபகரிப்பு நடவடிக்கைகளால் பள்ளிக்கல்வித்துறையினருக்கும் ஆட்சியாளர்களுக்கும் உயர் அலுவலர்களுக்கும் வேண்டுமானால் மகிழ்ச்சி தரலாம். ஆனால், ஏழை, எளிய, விளிம்புநிலை குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும் பேரிழப்பே ஆகும். சீர்திருத்தம் என்னும் பெயரில் தொடக்கக்கல்வித் துறையில் சீரழிவுகள் தொடங்கி விட்டன என்பதே கல்வியாளர்களின் ஒருமித்த எண்ணமாக இருப்பது மறுப்பதற்கில்லை. பள்ளிகள் இணைப்பு சிலருக்கு வரமாகக் காட்சியளித்தாலும் பலருக்குத் துயரமாகவே உள்ளது. ஆட்சியாளர்கள் இருதரப்பு நியாயங்களையும் கேட்டறிந்து நல்ல தீர்வு காண முயற்சித்தல் அவசர அவசியமாகும்.

DSE Proceedings- Dated: 29.08.2019: டான்சி நிறுவனத்தின் CSR திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு தேவையான தளவாட சாமான்கள் வழங்க பள்ளிகளின் விவரம் கோருதல் சார்பு!!!*

DSE Proceedings- Dated: 29.08.2019: டான்சி நிறுவனத்தின் CSR திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு தேவையான தளவாட சாமான்கள் வழங்க பள்ளிகளின் விவரம் கோருதல் சார்பு!!!

Diet இனிமேல் Brc - ஆக செயல்படும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

Diet இனிமேல் Brc - ஆக செயல்படும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின்(SCERT) கீழ் செயல்படும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் இனிமேல், மாவட்ட தலைமை வட்டார வள மையங்களாக(BRC) செயல்படும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து எஸ்இஆர்டி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (எஸ்இஆர்டி) கீழ் இயங்கும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் ஆகியவற்றில் பணியாற்றும் முதல்வர்கள், முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் கற்றல் கற்பித்தல் பணிகளை கண்காணிக்க வேண்டும். அதில் குறைகள் இருந்தால் உரிய நடவடிக்கைககளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முதல்வரும், முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்களும் ஒரு ஒன்றியத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும். 

ஒரு வாரத்தில் குறைந்த பட்சம் நான்கு வேலை நாட்கள் அல்லது மாதத்தில் 16 பள்ளிகளை பார்வையிட வேண்டும். கற்றல் உள்ளிட்ட பணிகளில் குறை ஏதாவது இருந்தால் வேறு நபர்களை அனுப்பி வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும். ஒவ்ெவாரு மாதமும் 5ம் தேதிக்குள் நிறுவன முதல்வர்கள் பள்ளிப் பார்வையின் தொகுப்பு அறிக்கை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எஸ்இஆர்டி இயக்குநருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். 

மேலும் பாடப்புத்தகங்களில் பிழைகள் இருந்தால் அதுகுறித்து ஆசிரியர்களிடையே கலந்தாலோசித்து அது தொடர்பான விவரங்களை செப்டம்பர் மாத இறுதிக்குள் இயக்குநருக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் சமீபத்தில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் லட்சக்கணக்கானோர் பெயிலானார்கள். எனவே, ஆசிரியர் பள்ளி நிறுவனங்களின் தரத்தை உயர்த்தவே இந்த உத்தரவை பள்ளி கல்வித்துறை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

அரசுப்பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட சிறப்பு ஆய்வில் புது தகவல்

அரசுப்பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட சிறப்பு ஆய்வில் புது தகவல்


குடும்பத்துக்கு ஒரு குழந்தை போதும் என்ற மனநிலை, கிராமப்புறங்களில் அதிகரித்து வருவது, அரசுப்பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட சிறப்பு ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது. உலக அளவில் மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனா முதலிடம் வகிக்கிறது. சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், அடுத்த 8 ஆண்டுகளில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக, இந்தியா உருவெடுக்கும் என கூறப்பட்டுள்ளது.

மக்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த, அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தைகளை பெற்றுக்கொள்வதில் கிராமங்களில் கட்டுப்பாடுகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை என்ற பேச்சு பரவலாக உள்ளது. ஆனால், கிராமங்களிலும் குடும்பத்துக்கு ஒரு குழந்தையுடன் நிறுத்திக்கொள்ளும் மனோபாவம் தற்போது அதிகரித்து வருவதாக, சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சேலம் அடுத்த உத்தமசோழபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் வழிகாட்டுதலின்படி, விரிவுரையாளர்கள் ரமேஷ்குமார் மற்றும் மான்விழி ஆகியோர், ‘‘ஒற்றைக் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அவர்களின் சமூக இணக்கம், கற்றல் அடைவில் ஏற்படும் பாதிப்புகள்’’ குறித்த ஆய்வினை சமீபத்தில் மேற்கொண்டனர்.

இந்த ஆய்வு,  மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர், வாழப்பாடி, ஓமலூர் பகுதியில் உள்ள கிராமங்களில், குடும்பத்தில் ஒரே பிள்ளையாக பிறந்து, அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களிடமும், அவர்களின் பெற்றோர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் முடிவில், நகர்ப்புற மனோபாவத்துக்கு இணையாக, கிராமப் பகுதிகளிலும் ஒற்றைக் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, நகர்ப்புறத்தை காட்டிலும் கிராமப் பகுதிகளில் வசிக்கும் ஒற்றைக் குழந்தைகள் திறன் மிக்கவர்களாக காணப்படுவதும், பெண் குழந்தையாக இருந்தாலும் ஒரு குழந்தை போதும் என்ற எண்ணம் அதிகரித்து வருவதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து ஆய்வு மேற்கொண்ட விரிவுரையாளர்கள் கூறியதாவது:

அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில், ஒற்றைக் குழந்தை என்பது சட்டமாக உள்ளது. ஆனால் இந்தியாவில் ஆண் குழந்தை பிறக்கும் வரை, குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும், ஆசைக்கு ஒன்று, ஆஸ்திக்கு ஒன்று என குறைந்தது 2 குழந்தையாவது பெற்றுக் கொள்ளும் எண்ணமும் இருந்து வந்தது. இந்த எண்ணம் சமீப காலமாக மாறி வருகிறது. பெருகிவரும் தனிக்குடும்ப வாழ்க்கை முறை, பொருளாதார காரணங்கள், சமூக அங்கீகாரம் உள்ளிட்ட காரணங்களால், ஒற்றை குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. ஆய்வின்போது, ஒற்றைக் குழந்தைகள், அவர்களுடன் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் நேரடியாக கருத்துக்கள் பெறப்பட்டன.

இதில், ஆண் குழந்தை மட்டுமல்ல, பெண் குழந்தையாக இருந்தாலும் ஒரு குழந்தை போதும் என்ற எண்ணம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், பெரும்பான்மையான ஒற்றைக் குழந்தைகள் பெண் குழந்தைகளாகவே உள்ளனர். பெற்றோர் ஒரு குழந்தை போதும் என்று நினைக்கும் நிலையில், குழந்தைகள் தங்களுக்கு ஓர் சகோதரனோ, சகோதரியோ வேண்டும் என எண்ணுகின்றனர். ஒரு சில பெற்றோர்கள் மட்டும், குழந்தைகள் மீது மிக அதிக கவனத்தை செலுத்துகின்றனர். இவர்கள் குழந்தைகளை விளையாடவோ, கடினமான செயல்களை செய்யவோ அனுமதிப்பதில்லை. தங்களின் ஒரே குழந்தைக்கு ஏதேனும் நேர்ந்து விடுமோ என்ற அச்சமே இதற்கு காரணம். கிராமப்புறம் மற்றும் மலைப்பகுதிகளை சார்ந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் சுதந்திரமாக செயல்பட வாய்ப்பு அளிப்பதால், அவர்களின் முடிவெடுக்கும் திறன், சொல்லாற்றல், மற்றவர்களுடன் பழகும் திறன் ஆகியவை நகர்ப்புற மாணவர்களை காட்டிலும் சிறப்பாக உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஆய்வின் முக்கிய முடிவுகள்

* ஒற்றை குழந்தைகளில் 86.6 % பேர், தாங்கள் தனியாக இருப்பதாக உணரவில்லை. மாறாக, நண்பர்கள், உறவினர்களுடன் சகஜமாக பேசி, விளையாடுகின்றனர். அதேசமயம், 13.3% பேர் தனிமையில் இருப்பதாக உணருகின்றனர்.

* பெற்றோரின் பயம் காரணமாக, 30 பேரில் 2 குழந்தைகள் நண்பர்களுடன் விளையாட அனுமதிக்கப்படுவதில்லை.

* 23.3% மாணவர்கள் படிப்பில் சிறப்பாகவும், 56.5% பேர் சராசரியாகவும், 10% பேர் சராசரிக்கு குறைவாகவும் உள்ளனர்.

* 66.5% சதவீத மாணவர்கள், திறன் மிக்கவர்களாகவும், சக நண்பர்களுடன் இயல்பாகவும் பழகுகின்றனர்.

* 30 பேரில் 7 மாணவர்கள், தங்களுடன் விளையாட சகோதரன் அல்லது சகோதரி தேவை என எதிர்பார்க்கின்றனர். ஆனால், அனைவரும் தங்களது பெற்றோர்களிடம் மனநிறைவுடன் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

உறவுமுறை தெரியாமல் போக வாய்ப்பு

மக்கள் தொகை பெருகி வரும் இந்தியாவுக்கு ஒற்றை குழந்தை நிலை அவசியமானது தான். ஆனால், அதேசமயம், அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு அத்தை-மாமா, சித்தி-சித்தப்பா, பெரியப்பா-பெரியம்மா போன்ற உறவுகளை பற்றி தெரியாமலே போய் விடும் நிலை உருவாகும் வாய்ப்பும் உள்ளது.

திறன் மிக்கவர்களாக விளங்கும் குழந்தைகள்

ஒற்றை குழந்தைகள் குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ‘பொதுவாக இந்தக் குழந்தைகள் அனைவரிடமும் எளிதாக பழகுகின்றனர். எந்த ஒரு வீட்டு பாடத்தையும், மற்ற குழந்தைகளைக் காட்டிலும் விரைந்து முடித்து விடுகின்றனர். அதேசமயம், மற்றவர்கள் முன் தம்மை எதுவும் கூற கூடாது என்பதில் கவனமுடன் இருக்கின்றனர். இதற்காகவே அனைத்து வேலைகளையும் கவனமுடன் விரைந்து முடித்து விடுகின்றனர். இந்தப் பண்பு அவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு பயன்படுகிறது,’ என்றனர்.

900 "பிரின்சிப்பல்கள்" பட்டியல் தயார் - பள்ளி கல்வித்துறை

900 "பிரின்சிப்பல்கள்" பட்டியல் தயார் - பள்ளி கல்வித்துறை



தமிழகத்தில், 900 பள்ளிகளின் தலைமை ஆசிரியர், இனி, 'பள்ளி முதல்வர்' என, அழைக்கப்படுவர்.

அரசு மேல்நிலைப் பள்ளிகளுடன், அருகில் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளி நிர்வாகங்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில், பள்ளி கல்வித்துறை இறங்கியுள்ளது. இவ்வாறு ஒருங்கிணைத்த பின், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், 'முதல்வர்' என்றழைக்கப்படுவர். இது குறித்து, அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும், மேல்நிலைப் பள்ளிகளுக்கு அருகில் உள்ள பள்ளிகள் குறித்து, விபரம் சேகரிக்கப்பட்டது.

மாநில அளவில், 800 - 900 மேல்நிலைப் பள்ளிகள், இந்த பட்டியலில் இடம் பெறும் என, கல்வித்துறை அலுவலர்களின் முதல் கட்ட கணக்கெடுப்பில் அறியப்பட்டு உள்ளது. விரைவில், ஒருங்கிணைந்த பள்ளிகளுக்கு முதல்வராகும், தலைமை ஆசிரியர் குறித்த விபரத்தை, பள்ளி கல்வித்துறை வெளியிட உள்ளது.

இவ்வாறு முதல்வர் பொறுப்பு ஏற்பவர், தங்கள் ஆளுகைக்கு கீழ் உள்ள, பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்குவது, தேர்வு நடத்துவது, சூழலுக்கு ஏற்ப பள்ளிகளுக்கு விடுமுறை வழங்குவது உள்ளிட்ட பணிகள், ஒதுக்கப்பட உள்ளன.அதே நேரம், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், 'பணி ஆசிரியர்' என, கருதப்படுவர்.



பணிநிரவல் ஆணைப்பெற்ற ஆசிரியர்களை உடனடியாக பணியிலிருந்து விடுவிக்க உத்தரவு - CEO Proceedings

பணிநிரவல் ஆணைப்பெற்ற ஆசிரியர்களை உடனடியாக பணியிலிருந்து விடுவிக்க உத்தரவு - CEO Proceedings

அரசுப் பள்ளிகளே மக்கள் பள்ளிகள்



அரசுப் பள்ளிகளே மக்கள் பள்ளிகள்


TNPSC - Group 4 Exam September 2019 - Tentative Cut-off ( Community Wise)

TNPSC - Group 4 Exam September 2019 - Tentative Cut-off ( Community Wise)



TNPSC Group 4 2019 Expected cut off Marks for TypistCategoryMaleFemaleGeneral152[+/- 3 Questions]151[+/- 3 Questions]BC149[+/- 3 Questions]147[+/- 3 Questions]MBC148[+/- 3 Questions]147[+/- 3 Questions]BC(M)138[+/- 3 Questions]136[+/- 3 Questions]SC141[+/- 3 Questions]140[+/- 3 Questions]SC(A)138[+/- 3 Questions]136[+/- 3 Questions]ST135[+/- 3 Questions]135[+/- 3 Questions]Note:  Based on No.of correct questions

TNPSC Group 4 2019 Expected cut off Marks for Junior Assistant CategoryMaleFemaleGeneral164[+/- 3 Questions]163[+/- 3 Questions]BC162[+/- 3 Questions]161[+/- 3 Questions]MBC162[+/- 3 Questions]162[+/- 3 Questions]BC(M)154[+/- 3 Questions]152[+/- 3 Questions]SC160[+/- 3 Questions]158[+/- 3 Questions]SC(A)155[+/- 3 Questions]154[+/- 3 Questions]ST156[+/- 3 Questions]153[+/- 3 Questions]Note:  Based on No.of correct questions

Cut Off Marks for Gr-IV Steno-Typist

TNPSC Group 4 2019 Expected cut off Marks for Steno TypistCategoryMaleFemaleGeneral142[+/- 3 Questions]140[+/- 3 Questions]BC135[+/- 3 Questions]132[+/- 3 Questions]MBC135[+/- 3 Questions]134[+/- 3 Questions]BC(M)126[+/- 3 Questions]121[+/- 3 Questions]SC124[+/- 3 Questions]121[+/- 3 Questions]SC(A)123[+/- 3 Questions]122[+/- 3 Questions]ST125[+/- 3 Questions]120[+/- 3 Questions]Note:  Based on No.of correct questions

TNPSC GROUP 4 CUT OFF MARKS 2018

Last year Tamilnadu Public Service Commission was conducted CCSE-IV exam to fill 11280 Vacancies. Around 18 lakh aspirants have attended that exam. As usual, TNPSC not released the official cut off marks. But some familiar Private institute had released the Gr-IV cut off marks. We tabulated below that the TNPSC CCSE 4 2018 cut off marks. This cut off marks will give you some idea about the upcoming exam’s Expected cut off marks.

மடித்தால் போன் விரித்தால் டேப்லெட்

மடித்தால் போன் விரித்தால் டேப்லெட்


ஹூவாய்' நிறுவனமும் ஃபோல்டபுள் போனை சந்தையில் இறக்கியுள்ளது. 'Mate X' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மாடல், 8 இன்ச் OLED டிஸ்பிளேவுடன் கெத்து காட்டுகிறது. மடிக்கும்போது 6.6 இன்ச் அளவுக்கு டிஸ்பிளே சுருங்கிவிடும். விரிக்கும்போது டேப்லெட் போல மாறிவிடும். 4,500 mAh பேட்டரி திறனுடன் 5G தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறு இதை வடிவமைத்திருக்கிறார்கள். உலகின் முதல் மல்டி – மோட் 5G பிராசஸரான 'Balong 5000 chipset'தான் இந்தப் போனை இயக்குகிறது என்பது ஹைலைட். 'சூப்பர் சார்ஜிங் டெக்னாலஜி' உள்ளதால் 30 நிமிடத்திலேயே பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். இந்த மாத இறுதிக்குள் இந்தியாவில் இந்த போன் கிடைக்கும். இதன் விலை ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 631 ரூபாய்


TNPSC - Group 4 Exam September 2019 - Original Question Paper And Answer Keys

TNPSC - Group 4 Exam

Dee Proceedings-தொடக்கக் கல்வி - ஒரே வளாகத்தில் செயல்படும் அரசு / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் மாணாக்கர்களின் நலன் மற்றும் நிர்வாக மேம்பாடு கருதி, இப்பள்ளிகளின் கல்விச் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் அதிகாரத்தை அதே வளாகத்தில் செயல்படும் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்குதல் - ஆணை வெளியிடப்பட்டது - பள்ளிகளின் விவரம் கோருதல் – சார்ந்து

Dee Proceedings-தொடக்கக் கல்வி - ஒரே வளாகத்தில் செயல்படும் அரசு / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் மாணாக்கர்களின் நலன் மற்றும் நிர்வாக மேம்பாடு கருதி, இப்பள்ளிகளின் கல்விச் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் அதிகாரத்தை அதே வளாகத்தில் செயல்படும் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்குதல் - ஆணை வெளியிடப்பட்டது - பள்ளிகளின் விவரம் கோருதல் – சார்ந்து

அரசு தொடக்கநிலை வகுப்புகளில் (1முதல் 5வகுப்பு வரை)பராமரிக்க பட வேண்டிய பதிவேடுகள் யாவை?தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற தகவல்

அரசு தொடக்கநிலை வகுப்புகளில் (1முதல் 5வகுப்பு வரை)பராமரிக்க பட வேண்டிய பதிவேடுகள் யாவை?தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற தகவல்


பள்ளி முடிந்து வீடு திரும்ப helicopter புக் செய்த ஆசிரியர்!

பள்ளி முடிந்து வீடு திரும்ப helicopter புக் செய்த ஆசிரியர்!


இன்றைய உலகில், வித்தியாசமான செயல்களை மேற்கொண்டு பிரபலம் அடையும் நபர்கள் பலர். அவர்கள் செய்யும் வித்தியாசமான விஷயத்தின் காரணமாகவே, விவாதத்தின் தலைப்பாக மாறுகிறார்கள்.

அந்த வகையில் தற்போது ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் விசித்திரமான நிகழ்வு ஒன்றினை மேற்கொண்டு, அம்மாநில மக்களின் விவாத தலைப்பாக மாறியுள்ளார்.

அப்படி என்ன செய்தார் அவர்?... என்னவென்று சொன்னால் நீங்கள் நம்புவது கடினம். ஆனால் அது தான் உண்மை.

ராஜஸ்தானை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தனது ஓய்வு நாள் அன்று, பள்ளியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஆல்வார் மாவட்டம் லக்ஷ்மன்கார்க் பகுதிக்கு உட்பட்ட மலாவ்லி கிராமத்தில் வசிக்கும் மூத்த ஆசிரியர் ரமேஷ் சந்திர மீனா.

ஆகஸ்ட் 31 அன்று தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் தனது கடைசி நாளை நினைவில் நிறுத்த, பள்ளியிலிருந்து வீட்டிற்குச் செல்ல ஹெலிகாப்டர் முன்பதிவு செய்தார். ராஜஸ்தானில் ஒரு ஆசிரியர் ஓய்வு பெற்ற பிறகு ஹெலிகாப்டர் மூலம் தனது வீட்டிற்குள் நுழைவது இதுவே முதல் முறை ஆகும்.

பள்ளியிலிருந்து 22 கி.மீ தூரத்தில் உள்ள தனது கிராமத்திற்குச் செல்ல அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியர் ரமேஷ் மீனா ஒரு ஹெலிகாப்டர் பதிவு செய்த விஷயம் அப்பள்ளி மட்டும் அல்லாமல் அப்பகுதி மக்களின் கவனத்தையே ஈர்த்தது.

ஹெலிகாப்டரில் இருந்து வீட்டிற்குச் செல்வதற்கான செலவு அவர் செலுத்திய சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ஆகும். இந்த விவகாரம் தற்போது அப்பகுதி மக்களிடையே பெரும் விவாதப்பொருளாக உருமாறியுள்ளது.

STIR Training for Up- Primary Teachers

STIR Training for Up- Primary Teachers




வாட்ஸ்ஆப்பில் அறிமுகமானது கைரேகை ஸ்கேனர் வசதி: பயன்படுத்து எப்படி?

வாட்ஸ்ஆப்பில் அறிமுகமானது கைரேகை ஸ்கேனர் வசதி: பயன்படுத்து எப்படி?


வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய வசதிகளை சேர்த்த வண்ணம் உள்ளது, அதன்படி இந்நிறுவனம் கைரேகை ஸ்கேனர் வசதியை அறிமுகம் செய்துள்ளது இந்நிறுவனம்.

குறிப்பாக இந்த வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த வசதி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இருக்கும் கைரேகை சென்சாரை பயன்படுத்துவதின் மூலம் உங்களின் வாட்ஸ்ஆப் செயலி திறக்கும்.ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அன்லாக் செய்வது போலவே ..குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், கைரேகை ஸ்கேனரை பயன்படுத்தி நீங்கள் உங்களின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அன்லாக் செய்வது போலவே வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்ற்குள் நுழைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பு 2.19.221மேலும் இப்போது வரை ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்தபுதிய வசதியைப் பயன்படுத்தி நீங்கள் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பு 2.19.221-ஐவைத்திருக்க வேண்டும் என அந்நிறுவனம்சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு!

தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு!


தமிழகம் முழுவதுமுள்ள மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர், அப்பகுதியில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை இன்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், அருகில் உள்ள தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும். ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் அப்பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்.

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் கட்டுப்பாடுகள் முழுதும் அப்பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியின் வசம் ஒப்படைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முஹரம் வருகின்ற 11.09.2019 புதன்கிழமை அன்று கொண்டாடப்படும்

தமிழ்நாட்டில் முஹரம் வருகின்ற 11.09.2019 புதன்கிழமை அன்று கொண்டாடப்படும்.


தமிழ்நாட்டில் முஹரம் வருகின்ற 11.09.2019 புதன்கிழமை அன்று கொண்டாடப்படும்.


ஒரு நாளைக்கு 10gb அதிவேக இலவச 4g data

ஒரு நாளைக்கு 10gb அதிவேக இலவச 4g data


தொலைத்தொடர்புதுறையில் ஜியோநிறுவனம்ஏற்படுத்திய மாபெரும் புரட்சியாராலும் மறக்க முடியாத ஓன்று. ஜியோவின் வருகையினால்பல்வேறு நிறுவனங்கள் ஆட்டம்காண்கின்றனர். ஏற்கனவே பலநிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டநிலையில் மீதமுள்ள நிறுவனங்கள்தங்கள் வாடிக்கையாளர்களை தக்கவைக்க பல்வேறு சலுகைகளைவழங்கிவருகிறது. அந்த வகையில்BSNL நிறுவனம் ஜியோநிறுவனத்திற்கு போட்டியாகஇரண்டு அட்டகாசமானசலுகைகளை அறிவித்துள்ளது. அதாவது 96 ரூபாய்க்கு ரீசார்ஜ்செய்வதன் மூலம் ஒருநாளைக்கு 10 GB அளவிலான 4G டேட்டாவைவழங்குகிறது BSNL நிறுவனம். இதன் வேலிடிட்டி 28 நாட்கள்மட்டுமேஅதேபோல் 236 க்கு ரீசார்ஜ்செய்தால் ஒருநாளைக்கு 10 GB அளவிலான 4G டேட்டாவை 84 நாட்களுக்கு பெறமுடியும்இந்தசலுகை குறிப்பிட்ட நாட்களுக்குமட்டுமே என தெரிவித்துள்ளது BSNL நிறுவனம். ஆனால், இதில்ஒருசிக்கல் என்னவென்றால் இந்ததிட்டத்தில் ரீசார்ஜ் செய்தால்இலவச அழைப்பு மற்றும் இலவசSMS எதுவும் கிடையாது என்பதுகுறிப்பிடத்தக்கது

Recent Posts

Total Pageviews

Code