மடித்தால் போன் விரித்தால் டேப்லெட்
ஹூவாய்' நிறுவனமும் ஃபோல்டபுள் போனை சந்தையில் இறக்கியுள்ளது. 'Mate X' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மாடல், 8 இன்ச் OLED டிஸ்பிளேவுடன் கெத்து காட்டுகிறது. மடிக்கும்போது 6.6 இன்ச் அளவுக்கு டிஸ்பிளே சுருங்கிவிடும். விரிக்கும்போது டேப்லெட் போல மாறிவிடும். 4,500 mAh பேட்டரி திறனுடன் 5G தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறு இதை வடிவமைத்திருக்கிறார்கள். உலகின் முதல் மல்டி – மோட் 5G பிராசஸரான 'Balong 5000 chipset'தான் இந்தப் போனை இயக்குகிறது என்பது ஹைலைட். 'சூப்பர் சார்ஜிங் டெக்னாலஜி' உள்ளதால் 30 நிமிடத்திலேயே பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். இந்த மாத இறுதிக்குள் இந்தியாவில் இந்த போன் கிடைக்கும். இதன் விலை ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 631 ரூபாய்
0 Comments:
Post a Comment