நீட் தேர்வில் வெற்றி பெற வழி கூறும் கல்வியாளர்! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, September 11, 2021

நீட் தேர்வில் வெற்றி பெற வழி கூறும் கல்வியாளர்!


இந்தியா முழுதும் 16 லட்சம் பேர், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர். அதில் 5 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவக் கல்லுாரிகளில் சேர முடியும் என்ற நிலையில், போட்டி பயங்கர மாக இருக்கிறது. முதல்முறை தேர்வு எழுதும் மாணவர்கள், ஒருவித பதற்றத்திலேயே இருப்பர். அவர்களுக்கு தொடர் தேர்வுகள் நடத்தி, சரியான விடைகளையும் அளிப்பதால், தேர்வு பயம் முற்றிலும் குறையும். இதற்காக இலவச தேர்வு பயிற்சி அளிக்கும் வகையில், கொஸ்டின் கிளவ்ட் இன் இணையதளத்தை உருவாக்கி உள்ளேன். அதிக பயிற்சி, அதீத வெற்றி. எனவே, படிப்புக்கான நேரத்தை அதிகப்படுத்துங்கள். தேவையற்ற கவனச் சிதறலை கைவிடுங்கள். எதைப் படித்தாலும் கவனமாக படித்தல், ஆழமாக புரிந்து படித்தல், தினமும் பயிற்சி எடுத்தல் ஆகிய மூன்றும் தான், வெற்றிக் கோப்பையை பெற்று தரும். நீட் தேர்வில் மொத்தமுள்ள 180 கேள்விகளில், 50 சதவீதம் அதாவது 90 கேள்விகள் உயிரியலில் இருந்தும், இயற்பியல் மற்றும் வேதியியலில் இருந்து தலா 45 கேள்விகளும் கேட்கப்படுகின்றன. தற்போது, ஒவ்வொரு பாடத்துக்கும் ஐந்து கேள்விகள் அதிகப்படுத்தப்பட்டு, அவை சாய்ஸ் ஆக வழங்கப்பட்டுள்ளன. இதனால், நன்கு தெரிந்த வினாக்களுக்கு மட்டுமே விடையளிக்கும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது. கொஸ்டின் கிளவ்ட் இன் இணைய தளத்தில், பாடத்திட்டம் வாரியாக 7,500 கேள்வித் தாள்கள் என, மூன்று லட்சத்துக்கும் அதிகமான கேள்விகளுடன் பதில்களும் உள்ளன. இத்தளத்தில் பயிற்சி எடுக்கும் மாணவர், மூன்று மணி நேரத் தேர்வை எழுதி முடித்த அடுத்த நிமிடமே அவருக்கு மதிப்பெண்ணும் கிடைத்துவிடும். இப்படியான மாதிரி தேர்வுகளை பழகுவது வெற்றிக்கு எளிதாக இருக்கும். முன்கூட்டியே மையங்களை அடைந்து விடுங்கள். நன்கு மூச்சுப் பயிற்சி எடுத்துக் கொள்பவர்களுக்கு மூளை திறம்பட வேலை செய்யும். நன்கு தெரிந்த கேள்விகளை முதல், ரவுண்டில் வேகமாக முடித்து விட வேண்டும். ஒருமுறை, ஒரு விடையை குறியீடு செய்து விட்டால் மாற்ற முடியாது என்பதால், ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்து குறியிடுவது அவசியம். மொத்தம் 180 கேள்விகளில், 150க்கு சரியான விடை எழுதினாலே 600 மதிப்பெண் பெறலாம். 500க்கும் அதிகமாக மதிப்பெண் எடுத்தால் மட்டுமே டாக்டர் கனவை தக்கவைத்துக் கொள்ள முடியும். நீங்கள் ஒருமுறை கஷ்டப்பட்டு படித்து, சீட்டை பெற்று விட்டால், அடுத்த 50 ஆண்டுகளுக்கு நீங்கள் ராஜா தான்!

Post Top Ad