தமிழகத்தில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
அரசு ஊக்கத்தொகை:
தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது திமுக அணி. அதனை தொடர்ந்து தற்போது மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புதிய ஆட்சிக்கு பின்னர் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின், வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் துறைகளின் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் திட்டங்கள் குறித்து சட்டப்பேரவையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தினமும் வரிசையாக துறை வாரியாக விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அதனை ஒவ்வொன்றாக நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் விளக்கமளித்துள்ளார். தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் உதவித்தொகை வழங்கி வருகிறது. அதனை தொடர்ந்து அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் இத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் 12,959 கோயில்களில் பணிபுரிவோருக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்பட்டு வருகிறார் எனவும், அமைச்சர் சேகர்பாபு செயல் பாபுவாக பணியாற்றுகிறார் என புகழ்ந்து பேசியுள்ளார்.