தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு- ஊதியப் பட்டியல் தயாரித்தல் சார்ந்த விளக்கம்- THANKS - MR.LAWRENCE- TRICHY



 தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளிஆசிரியர்களின் கடந்த மாத ஊதியப்பட்டியலிலிருந்து, இந்த மாத ஊதியப்பட்டியலில் எந்தெந்த இனங்களில், மாற்றம் செய்யப் பட்டுள்ளது என்றவிவரத்தை, மேற்கண்ட படிவத்தில்  நிரப்பி, ஊதியப் பட்டியலுடன்இணைத்துத் தரும் போது, இணையதளத்தில் ஊதிய விவரங்களை பதிவேற்றம் செய்யும், அலுவலகப்பணியாளர்களுக்கும், ஊதியப்பட்டியலை சரி பார்த்து ஒப்புதல்அளிக்கும் அலுவலர்களுக்கும் எளிதாகஇருக்கும் எனக் கருதப் படுகிறது.

 

இதன்மூலம் ஊதியப் பட்டியலில்கோரப்படும் ஊதியம், எவ்விதவித்தியாசமும் இன்றி உரியதலைப்புகளில் சரியாக வரவு வைக்கப்படுவதுடன், (உதாரணமாக PF சந்தா, வருமான வரி பிடித்தம் மற்றும் பிற...) ஆசிரியர்களின் வங்கிக் கணக்கிலும், ஊதியப் பட்டியலில் கோரப்பட்டசரியான நிகரத் தொகை வரவுவைப்பது உறுதி செய்யப்படும் எனஎதிர் பார்க்கலாம்.

 

கணினி மூலம், தங்கள் பள்ளிஆசிரியர்களுக்கான ஊதியப் பட்டியல்தயாரிப்பவர்கள், இந்த மாத ஊதியப்பட்டியலில் மாற்றம் செய்யப் பட்டுள்ளஊதியம் மற்றும் பிடித்தம் இனங்களின்விவரங்களை மட்டும் Bold செய்துகாண்பிக்கலாம்.

 

 கடந்த மாத ஊதியம் / பிடித்தம்விவரங்களை Bold செய்ய வேண்டாம்.

 

( இதற்காகவே Excel file அனுப்பப்பட்டுள்ளது. இதிலேயே Edit செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்)

 

கையினால் எழுதப்படும் ஊதியப்பட்டியல் தயாரிப்பவர்கள், கடந்த மாதஊதியத்தில்  பெறப் பட்ட  இனங்களின்விவரங்களை ஊதா மையினாலும், இந்த மாத ஊதியப் பட்டியலில், செய்யப் பட்டுள்ள மாற்ற விவரங்களைமட்டும், சிவப்பு வண்ண மை கொண்டுஎழுதலாம்.

 

மாற்றம் செய்யப் பட்ட இனங்களில்  கடந்த மாதம் பெற்ற / பிடித்தம் செய்யப்பட்ட தொகையை ஊதா மையினாலும், இந்த மாதம் பெற வேண்டிய ஊதியம்(ஆண்டு ஊதிய உயர்வு, தேர்வு நிலைஊதியம், சிறப்பு நிலை ஊதியம், ஊக்கஊதியம், ஊதியமில்லா விடுப்புநாட்கள், அரைச் சம்பள விடுப்புஊதியம் போன்ற மாற்றம் செய்யப் பட்டவிவரங்கள் மட்டும்) /

பிடித்தம் செய்யப் பட வேண்டியதொகையையும் (PF சந்தாத் தொகைஉயர்த்துதல், வருமான வரி பிடித்தம்உயர்த்துதல் மற்றும் சொசைட்டி பிடித்தமாற்றம் போன்றவை) சிவப்பு நிறமையினாலும் எழுதி, ஊதியப்பட்டியலுடன் இணைத்துஒப்படைத்தால், சம்பளப் பட்டியல்பதிவேற்றம் செய்பவர்களுக்குபேருதவியாக இருக்கும்.


கடந்த மற்றும் இந்த மாத ஊதியவிவரங்கள் அனைத்தையும் எழுதவேண்டிய அவசியமில்லை.

PAY BILL DIFFERENCE FORMATS LINKS- click here




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive