M.phil பட்டப்படிப்புக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, December 16, 2020

M.phil பட்டப்படிப்புக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.



நடப்பு கல்வியாண்டில், முழு நேர முனைவர் பட்டப்படிப்பு படிக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள், உதவித் தொகை பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழகத்தில் உள்ள, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், முழு நேர முனைவர் பட்டப் படிப்பு மேற்கொள்ளும், தமிழகத்தை சேர்ந்த, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.பகுதி நேர ஆராய்ச்சி மாணவர்கள் பயன் பெற இயலாது. விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டுக்கு, 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.இதை பெற, மாணவரின் குடும்ப ஆண்டு வருமானம், 2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர், முதுகலை பட்டப்படிப்பில், 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்கள், 1,200க்கு மேல் வந்தால், மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.பல்கலையால் அனுமதிக்கப்பட்ட, படிப்பு கால அளவிற்கு மட்டும், ஊக்கத்தொகை அளிக்கப்படும். உதவித்தொகை பெற விரும்புவோர், 2021 பிப்., 1க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் மாணவர்கள், விண்ணப்பங்களை, 'ஆணையர், ஆதிதிராவிடர் நலத் துறை, சேப்பாக்கம், சென்னை - 5' என்ற முகவரிக்கும், பழங்குடியின மாணவர்கள், 'இயக்குனர், பழங்குடியினர் நலத்துறை, சேப்பாக்கம், சென்னை - 6' என்ற முகவரிக்கும் அனுப்ப வேண்டும்.இத்தகவலை, ஆதிதிராவிடர் நலத் துறை ஆணையர் முனியநாதன் தெரிவித்துள்ளார்.

Post Top Ad