முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல் வெளியீடு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, December 9, 2020

முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல் வெளியீடு.பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் சென்னை மேல்நிலைப்பள்ளிகளில் 2020-2021 - ஆம் கல்வியாண்டில் பாடவாரியாக காலியாகவுள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்பும் பொருட்டு 01 / 01 / 2020 - ஐ மைய நாளாக கொண்டு உரிய தகுதி வாய்ந்த மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் மொழி ஆசிரியர்களின் பெயர் பட்டியல் பள்ளித் தலைமை ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்டு தற்காலிக தெரிவுப்பட்டியல் ( Temporary Panel ) தயாரிக்கப்பட்டுள்ளது. 


பார்வை 2 ல் கண்டுள்ள அரசாணை எண் . 720 , பள்ளிக்கல்வித்துறை , நாள் : 28.04.1981 ல் , தமிழ்நாடு மேல்நிலைக்கல்வி பணியின்படி ( The Tamil Nadu Higher Secondary Educational Service ) முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்களை 50 % நேரடி நியமனம் மூலமும் , 50 % பதவி உயர்வின் மூலமும் நிரப்பப்பட வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பார்வை 3 ல் கண்டுள்ள தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக்கல்வித்துறையின் , தமிழ்நாடு மேல்நிலைக்கல்வி சிறப்பு விதிகளில் , “ முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான கல்வித் தகுதியாக ஒரே பாடத்தில் ( same subject ) இளங்கலை பட்டம் ( Bacheler's degree ) மற்றும் முதுகலை பட்டம் ( Master's degree ) பெற்று இருக்க வேண்டும் " என்று கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


 BT TO PG PANEL LIST - Download here...

Post Top Ad