கூட்டுறவு சங்கங்கள் சார்பில் செயல்படும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் 40 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையாளர்கள், எடையாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதிதாக சம்பள நிர்ணய ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.2015, நவ., 9 முதல் 2020 நவ.,8 வரையான ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து புதிய ஒப்பந்தம் மேற்கொள்ள கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் சக்தி சரவணன் தலைமையில்குழு அமைத்து அதன் அறிக்கை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லுார் ராஜூவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
ஆனாலும் இதுவரை புதிய ஒப்பந்தம் அமலுக்கு வரவிவில்லை. இதனால் பணியாளர்கள் பழைய சம்பளம் பெறுகின்றனர்.
அவர்கள் கூறியதாவது:ஒரே பணி நிலையில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களின் ஆரம்ப நிலை சம்பளம் ரூ.15 ஆயிரம். ரேஷன் கடை பணியாளர்களுக்கு ரூ.5 ஆயிரமாக உள்ளது.
புதிய சம்பள நிர்ணய குழுவிடம் நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையான சம்பளம், ஓய்வூதியம் வழங்குவது, பொங்கல் பொருட்கள் வழங்குவதற்கான ஊக்க ஊதியம் (ஒரு கார்டுக்கு) ஒரு ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்துள்ளோம். இவற்றை பரிசீலனை செய்து தாமதமின்றி புதிய ஒப்பந்தம் விரைவில் அமல்படுத்த வேண்டும் என்றனர்.
0 Comments:
Post a Comment