இனி இந்த ஃபோன்களில் எல்லாம் வாட்ஸ்அப் வேலை செய்யாது!


அன்றாட வாழ்வில் முக்கிய இடத்தை பிடித்து விட்டது வாட்ஸ்அப் செயலி. இப்போதுள்ள மொபைல்களில், அது ஆண்ட்ராய்டு ஃபோனாக இருந்தாலும், ஆப்பிள் ஐஃபோனாக இருந்தாலும் வாட்ஸ்அப் செயலி இல்லாமல் இருப்பதில்லை.

இந்தநிலையில், குறிப்பிட்ட சில ஃபோன்களில், 2021 ஆம் ஆண்டிலிருந்து வாட்ஸ்அப் செயலி செயல்படாது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு வெர்ஷன் 4.0.3 விற்கு முந்தைய வெர்ஷன்களை கொண்ட ஆண்ட்ராய்டு ஃபோன்களில், அடுத்த ஆண்டிலிருந்து வாட்ஸ்அப் செயலி செயல்படாது. மேலும் ஐஃபோன்களில், ஐ.ஓ.எஸ் வெர்ஷன் 9 -ற்கு முந்தைய வெர்ஷன்களில் வாட்ஸ்அப் செயலி இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஐபோன் 4, 5, 5எஸ், 6, 6 எஸ் உள்ளிட்டவற்றை வைத்திருப்பவர்கள், வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்த, தங்களது ஐபோன் வெர்ஷனை அப்டேட் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive