மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக, கல்வித்துறை சார்பில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 10, 11 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, கட்டாயம் தேர்வு நடக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே நேரம், பாடத்திட்டம் குறைக்கப் படுவதும், உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட பாடங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.
தலைமையாசிரியர்கள் சிலர் கூறியதாவது;
பள்ளி திறப்பு குறித்து, அரசு விரைவில் முடிவெடுக்க உள்ளது. தேர்வுக்கு மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும்.
எந்நேரத்தில் தேர்வு நடத்தப்படும் என்பது குறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்படும். ஆன்லைன் மூலம் நடத்தப்படும் பாடங்களில், கூடுதல் கவனம் செலுத்த மாணவ, மாணவியருக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
விரைவில் உத்தேச பாடத்திட்டம் வெளியாகும்; அதற்கேற்ப தேர்வும் அமையும் என, பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்
0 Comments:
Post a Comment