இந்த வருஷம் நம்ம மக்கள் கூகுளில் அதிகம் தேடியது எந்த செய்தி தெரியுமா? கொரோனாவை இல்லை.. பாருங்க இதை!


டெல்லி: 2020ம் ஆண்டு, இந்தியாவில், கூகுளில் அதிகம் தேடப்பட்ட செய்திகள் என்ன என்பது பற்றி கூகுள் வெளியிட்டுள்ளது.

இதில் டாப் வரிசையில் இருப்பது இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும், ஐபிஎல்தான். லாக்டவுன், கொரோனா வைரஸ் போன்ற, மக்களின் அன்றாட வாழ்க்கை தொடர்புள்ள செய்திகளைவிடவும், மக்கள் ஐபிஎல் கிரிக்கெட் பற்றி அதிகம் தேடியுள்ளனர்.

பெய்ரூட்டில் நடந்த வெடிப்பு சம்பவத்தையும் அதிகம் பேர் கூகுளில் தேடியுள்ளனர். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த வெடிப்பு நிகழ்வில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 158ஆக அதிகரித்தது நினைவிருக்கலாம்.

ஆஸ்திரேலியா காட்டுத் தீ பற்றியும் இந்தியர்கள் அதிகம் தேடியுள்ளனர். மற்ற நிகழ்வுகள் உள்நாட்டு நிகழ்வுகளாக உள்ளன.

அதிகம் பேர் தேடிய டாப் 10 பட்டியலை பாருங்கள்:

1) இந்தியன் பிரீமியர் லீக்

2) கொரோனா வைரஸ்

3) அமெரிக்க அதிபர் தேர்தல்

4) நிர்பயா வழக்கு

5) பெய்ரூட் வெடிப்பு

6) லாக்டவுன்

7) சீனா-இந்தியா மோதல்கள்

8) ஆஸ்திரேலியா காட்டுத் தீ

9) வெட்டுக்கிளி தாக்குதல்

10) ராமர் கோவில்

source: oneindia.com





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive