பிறப்பு சான்றிதழில் 5 ஆண்டு வரை குழந்தை பெயரை பதிவு செய்யலாம்: அரசு அறிவிப்பு


பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றிதழ் ஆகும். பிறப்பு சான்றிதழ் குழந்தை பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை பெற, வயது குறித்து ஆதாரம், ஓட்டுநர் உரிமம் பெற, பாஸ்போர்ட் மற்றும் விசா உரிமம் பெற இன்றியமையாதது. திருத்தி அமைக்கப்பட்ட தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவு விதி படி, 1.1.2000க்கு முன் பிறந்த குழந்தைகளுக்கு 31.12.2014 வரை பெயர் பதிவு செய்திட வழி வகை செய்யப்பட்டது. 

பின்னர் இது மேலும் 5 ஆண்டு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு 31.12.2019 வரை குழந்தையின் பெயர் பதிவு செய்திட அரசு ஆணை பிறப்பித்தது. அரசு அறிவித்த 15 ஆண்டு கால அவகாசம் முடிவுற்ற அனைத்து பிறப்பு பதிவுகளுக்கும் பெயர் பதிவு செய்திட மேலும் 5 ஆண்டு கால அவகாச நீட்டிப்பு இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்டுள்ளது. 

அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், நகராட்சி மற்றும் மாநகராட்சி, கன்டோன்மென்ட், பேரூராட்சி, கிராம ஊராட்சி அலுவலகங்களில் குழந்தையின் பெயரை பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive