36 ஆயிரம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 'லேப்டாப்' வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் :

'தமிழகத்தில் இந்தாண்டு 'பூஜ்ஜியம்' கல்வியாண்டாக செயல்படுத்தும் வாய்ப்புகள் குறித்து, முதல்வரிடம் கலந்து பேசி, முடிவுகள் மேற்கொள்ளப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், நம்பியூரில் அவர் கூறியதாவது: தமிழகத்தில், தொடர்ந்து பள்ளிகள் இயங்காததால், இந்தாண்டு பூஜ்ஜியம் கல்வியாண்டாக செயல்படுத்தும் வாய்ப்புகள் குறித்து, முதல்வரிடம் கலந்து பேசி, முடிவுகள் மேற்கொள்ளப்படும். அனைத்து வகுப்புகளுக்கும், முழு ஆண்டுத்தேர்வு எப்போது நடத்துவது என்பது குறித்து முதல்வரிடம் கலந்து பேசி முடிவு செய்யப்படும். நடப்பாண்டில், அரசு பள்ளியை சேர்ந்த, 36 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, 'லேப்டாப்' வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

'தமிழகத்தில் இந்தாண்டு 'பூஜ்ஜியம்' கல்வியாண்டாக செயல்படுத்தும் வாய்ப்புகள் குறித்து, முதல்வரிடம் கலந்து பேசி, முடிவுகள் மேற்கொள்ளப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive