2,500 பேர் எழுதிய தேர்வில் 6 பேர் மட்டுமே தேர்ச்சி : 32 மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவால் நீதித்துறை அதிர்ச்சி


தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட முதல்நிலைத் தேர்வில் வெறும் 6 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 32 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த நவம்பர் 1ம் தேதி நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்றம் நடத்திய முதல் நிலைத் தேர்வில், கீழமை நீதிமன்ற நீதிபதிகள், சிவில், குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என மொத்தம் மூவாயிரத்து 2,500 பேர் பங்கேற்றனர். இந்த தேர்வு எழுத குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் வழக்கறிஞர்களாக பணிபுரிந்திருக்க வேண்டும். இந்த முதல் நிலைத் தேர்வில், அரசியல் அமைப்புச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் குறித்தான கேள்விகள் கேட்கப்படும். 


இந்த நிலையில், முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் வெறும் 6 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளது நீதித்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஆண்டும் இல்லாத அளவில் கேள்விகள் மிகக் கடுமையாக இருந்ததாகவும், தவறான விடைக்கு மைனஸ் மதிப்பெண் வழங்கப்பட்டதாலும் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது எனக் கூறப்படுகிறது. இதே போல் கடந்த ஆண்டு நடந்த நீதிபதி பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. முதல்நிலைதேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பிரதான தேர்வில் கலந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive