தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் சரண்டர் . - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, December 20, 2020

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் சரண்டர் .


 

பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அரசு ஆணையில் கூறியிருப்பதாவது : பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து அரசு உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகளில் நிர்வாகம் , அலுவலகம் தொடர்பான பணிகளை மேற்கொள்வ தற்கு உதவியாளர்கள் , இளநிலை உதவியாளர்கள் , பதிவறை எழுத்தர் பணியிடங்கள் தோற்றுவிக்க ஆண்டுக்கு ரூ .12.84 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் . இந்நிலையில் தற்போது அரசுப் பள்ளிகளில் 233 உபரி உதவியாளர் பணியிடங்கள் இருப்பதாகவும் , 622 இளநிலை உதவியாளர் பணியிடங்களும் , 95 பதிவறை எழுத்தர் பணியிடங்களும் தேவை இருப்பதாகவும் பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார் . எனவே 233 உபரி உதவியாளர் பணியிடங்களை மாணவர்கள் எண்ணிக்கை 751 முதல் 1000 வரை உள்ள பள்ளிகளுக்கு பகிரிந்தளிக்க உத்தரவிடப்ப டுகிறது . இதன் மூலம் 389 இளநிலை உதவியாளர் பணியிடங்களும் , 95 பதிவறை எழுத்தர் பணியிடங்க ளும் சேர்த்து மொத்தம் 484 பணியிடங்கள் அனுமதிக் கப்படும் . இதற்கு ஏற்படும் ஊதிய செலவினங்களுக்கு ஏற்றவாறு 250 பட்டதாரி ஆசிரியர் உபரி பணியிடங்கள் அரசுக்கு சரண்டர் செய்யப்படுகிறது . இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது .

Post Top Ad