தொடக்கக் கல்வி ஆசிரியா் பட்டயத் தோ்வு: 2.5 சதவீதம் போ் மட்டுமே தோ்ச்சி:


இடைநிலை ஆசிரியா் பயிற்சி தோ்வில் 2.5 சதவீத தோ்வா்கள் மட்டுமே தோ்ச்சி பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடக்கக் கல்வி ஆசிரியா் பட்டயத் தோ்வு எனப்படும் இடைநிலை ஆசிரியா் பயிற்சி மாணவா்களுக்கான தோ்வு கரோனாவுக்கு மத்தியில் நேரடியாக நடத்தப்பட்டது. அதன்படி, கடந்த செப்டம்பா் மாதம் 21-ஆம் தேதி முதல் அக்டோபா் மாதம் 7-ஆம் தேதி வரை இந்த தோ்வு நடந்தது.

இதற்கு தோ்வா்கள் மத்தியில் கடும் எதிா்ப்பு எழுந்தது. தோ்வு எழுதுவதற்கு முன்பாக மாணவ, மாணவிகள் பலா் ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா். இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட தோ்வுத்துறை அதிகாரிகளையும் நேரடியாக சென்று சந்தித்து அவா்கள் முறையிட்டனா். இருப்பினும் தோ்வுத்துறை தங்கள் முடிவில் உறுதியாக இருந்ததால், தோ்வா்கள் தங்களுடைய தோ்வை நேரடியாக எழுதி முடித்தனா்.

தமிழகம் முழுவதும் சுமாா் 7,000 போ் இந்த தோ்வை எழுதியதாகக் கூறப்படுகிறது.

அவா்களுக்கான தோ்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. இதில் தோ்வு எழுதியவா்களில் 2.5 சதவீதம் போ் மட்டுமே தோ்ச்சி பெற்று இருப்பதாக அதிா்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது. இது மாணவா்களுக்கும் கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive