2020-2021 ஆம் கல்வியாண்டு பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு (Secondary| & Elementary) பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துதல் - நிதி விடுவித்தல் மற்றும் வழிகாட்டுதல்கள் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, December 23, 2020

2020-2021 ஆம் கல்வியாண்டு பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு (Secondary| & Elementary) பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துதல் - நிதி விடுவித்தல் மற்றும் வழிகாட்டுதல்கள்


ஒருங்கிணைந்த கல்வி , விழுப்புரம் மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் திருமதி.கோ.கிருஷ்ணப்பிரியா , B.Sc. , M.A.B.Ed . , ந.க.எண் . 577 / S & S / ஒக / 2020 

நாள் : 18.12.2020 . 

பொருள் : ஒருங்கிணைந்த கல்வி - விழுப்புரம் மாவட்டம் 2020-2021 ஆம் கல்வியாண்டு பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ( Secondary Elementary ) பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துதல் - நிதி விடுவித்தல் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்குதல் - சார்பு . 

பார்வை : மாநிலத்திட்ட இயக்குநர் , ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , சென்னை -6 அவர்களின் செயல்முறைகள் ந.க.எண் .539 / C6 / SS / 2020 , 

நாள் : 12.11.2020 . & பார்வையில் காணும் மாநில திட்ட இயக்குநர் அவர்களின் கடிதத்தின்படி , 2020-2021 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி பாதுகாப்பு உணர்வுடன் கல்வி கற்கும் சூழலை உருவாக்குவதற்காக , “ பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு " ( Safety & Security at School Level ) என்ற தலைப்பில் பள்ளி ஒன்றுக்கு ரூ .500 / - வீதம் திட்ட ஏற்பளிப்புக் குழுவால் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது .

 இதன் உயரிய நோக்கம் , உலக அளவில் கோவிட் - 19 கிருமியின் காரணமாக நோய்த் தொற்று பரவும் அசாதாரணமான தற்போதைய சூழலில் , பள்ளி மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி பள்ளிக்கு வருவதை உறுதிபடுத்துவதும் , தன்சுத்தத்துடனும் , பாதுகாப்பு உணர்வுடனும் கல்வி கற்கும் சூழலை பள்ளிகளில் ஏற்படுத்துவதும் ஆகும் . எனவே பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிக்காக , பள்ளி ஒன்றுக்கு ரூ .500 / - வீதம் அனைத்து வட்டார வளமையங்களுக்கு 1758 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்காக இணைப்பில் காணும் அட்டவணைப்படி நிதி விடுவிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது . வழிகாட்டுதல்கள் மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டியவை : 1. மாவட்ட திட்ட அலுவலகத்திலிருந்து நிதி விடுவிக்கப்பட்டவுடன் சார்ந்த பள்ளிகள் திறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு நிதியை விடுவித்து பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் அனைத்தும் செய்யப்பட வேண்டும் .



Post Top Ad