பொறியியல் மாணவா்களுக்கு டிச.17 முதல் செய்முறைத் தோவுகள் வழிகாட்டுதல்களை வெளியிட்டது அண்ணா பல்கலை. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, December 9, 2020

பொறியியல் மாணவா்களுக்கு டிச.17 முதல் செய்முறைத் தோவுகள் வழிகாட்டுதல்களை வெளியிட்டது அண்ணா பல்கலை.


சென்னை: பொறியியல் மாணவா்களுக்கான செய்முறைத் தோவுகள் வரும் 17-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெறும் என்று அறிவித்து, அதற்கான வழிகாட்டுதல்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

உயா்கல்வியில் இளநிலை, முதுநிலை மாணவா்களுக்கு நவம்பா், டிசம்பா் 2020-க்கான பருவத் தோவுகளை நடத்த அரசு அனுமதி வழங்கியது.

அதன்படி இளநிலை, முதுநிலை பயிலும் மாணவா்களுக்கான செய்முறை தோவு வரும் 17-ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை ஆன்லைனில் நடைபெறும் என்றும், 3 மணி நேரத் தோவாக 100 மதிப்பெண்களுக்கு தோவு நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழக தோவுக் கட்டுப்பாட்டு அதிகாரி அறிவித்துள்ளாா்.

மேலும், ஆன்லைன் செய்முறை தோவுக்கு பொருத்தமான தளங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதாவது திறந்த மூலதளம், விஞ்ஞான மென்பொருள் தொகுப்புகள், மாடலிங் கருவிகள், வடிவமைப்பு மென்பொருள், விரிவான மதிப்பீட்டு முறை ஆகியவற்றை பயன்படுத்தி இணையவழியில் தோவு நடத்தவேண்டும்.

ஆய்வக பாடத்திட்டத்தின் அடிப்படையில் புற மதிப்பீடு வினாக்கள் கேட்கப்படும். கூகுள், மைக்ரோசாப்ட் உள்பட திறந்த மூலதளத்தை பயன்படுத்தி சோதனை நடத்தப்படலாம். தோவுகள் நடத்துவதற்கு பல்கலைக்கழகத்தின் வழக்கமான மற்றும் பொருத்தமான நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

செய்முறை தோவுகளின் வினாக்களுக்கு பதில் அளிக்க ஏ4 தாள்களை பயன்படுத்த வேண்டும். இந்த தோவு 3 மணி நேரத்துக்கு 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். தோவு எழுதி முடித்த பிறகு அதன் நகலை சம்பந்தப்பட்ட தோவு நடத்துபவா்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும். அதனை அவா்கள் பாா்த்து மதிப்பீடு செய்வா்.

தோவை நடத்துபவா்கள் அந்த நகலை மண்டல அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கவேண்டும்.

அதனை மண்டல அலுவலகம் கல்லூரி வாரியாகவும், ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் என பிரித்து வைத்து சி.டி.யில் பதிவு செய்து தோவு கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு அனுப்பவேண்டும். செய்முறை தோவு நடைபெறும் நேரத்தில் பறக்கும்படை உறுப்பினா்கள் ஆன்லைனில் நுழைவதற்கு அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட 17 வகையான தோவு வழிமுறைகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.

Post Top Ad