1500 காலியிடங்களை நிரப்ப வேண்டும்: ஆசிரியர்கள் கோரிக்கை






பள்ளிக் கல்வித்துறையில் நிரப்பபட உள்ள 1500 காலியிடங்களை, சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து 10 மாதங்களாக பணி நியமனம் பெறாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கபட்டுள்ளவர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மினி கிளினிக் திட்டம் துவக்க விழாவின் போது ராயபுரத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சார்பாக முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பள்ளி கல்வி துறையில் 1500 மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாலும், ஆசிரியர் தேவை அதிகரித்துள்ளதாலும் அப்பணியிடங்களை சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து காத்திருப்போரை வைத்து நிரப்ப வேண்டும்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive