குரூப்-1 தேர்வு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்.: தேர்வுக்கு 9 நாட்களே உள்ள நிலையில் தேர்வர்கள் தவிப்பு


குரூப்-1 தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பால் ஆதார் எண்ணை இணைக்க முடியாமலும், ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியாமலும் தேர்வர்கள் தவித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கள் கடந்த ஏப்ரல் மாதம் நடக்க இருந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததால் ஜனவரி 3ம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். ஆனால் முன்னறிவிப்பு எதுவும் இன்றி திடீரென தேர்வர்கள் ஒருமுறை பதிவு செய்த ஐடி உடன் ஆதார் எண்ணை இணைத்தல் மட்டுமே ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும் என்று தேர்வாணையம் கூறியுள்ளது.

இதனால் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியாமல் தேர்வர்கள் தவித்து வருகின்றனர். தேர்வுக்கு இன்றும் 9 நாட்களே உள்ள நிலையில், தேர்வர்கள் தேர்வுக்கு படிப்பார்களா இல்லை தேர்வு எழுத ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய போராடுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive