Flash News : ஜூலை 26-ம் தேதி நீட் தேர்வு; வரும் கல்வியாண்டில் நாடு முழுவதும் புதிய கல்விக்கொள்கை அமல்!

Flash News : ஜூலை 26-ம் தேதி நீட் தேர்வு; வரும் கல்வியாண்டில் நாடு முழுவதும் புதிய கல்விக்கொள்கை அமல்!

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டலை அடுத்து கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு மத்திய அரசின் கல்விக் கொள்கை தொடர்பான ‘புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு - 2019’யை கடந்தாண்டு வெளியிட்டது. இந்த கல்விக் கொள்கை வரைவு இந்தியை திணிக்கும் நோக்கத்தில் உள்ளதாகவும், ஏழை மாணவர்களின் கல்வியை பறிக்கும் செயலாக உள்ளது எனவும் தமிழகத்தில் எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாம் மொழியாக இந்தி கட்டாயம் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து கட்டாயம் என்பது நீக்கப்பட்டு,   விரும்பினால் பயிற்றுவிக்கலாம் என்று மாற்றப்பட்டது.

இந்த வரைவு அறிக்கை தொடர்பாக கடந்தாண்டு ஜூலை 31ம் தேதி வரை கருத்துகளை தெரிவிக்க மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அவகாசம் அளித்தது. இந்த வரைவு  அறிக்கை குறித்து கருத்து கேட்பு கூட்டம் நாட்டில் பல இடங்களில் ரகசியமாக நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே, நாடு முழுதும் சுமார் 2 லட்சம் பேர் தங்களது கருத்துக்களை அனுப்பி உள்ளனர். இதனையடுத்து மாநில கல்வி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் ஆலோசனைகள் நடத்தப்பட்டன. தற்போது, அனதை்து 
 கருத்துகளையும் ஆய்வு செய்து இறுதி வரைவு அறிக்கையை மத்திய அரசு தயாரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி புதிய கல்விக்கொள்ளை இறுதி அறிக்கை குறித்து ஆலோசனை நடத்தியதாகவும், விரைவில் புதிய  கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மாணவர்களுடனான ஆன்லைன் உரையாடலில் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், வரும் கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், வரும் ஜூலை 26-ம் தேதி மருத்துவப்படிக்கான நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளார். JEE தேர்வுகள் ஜூலை 18 முதல் ஜூலை 23 வரை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive