மாணவர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி; 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை ஜூன் மாதம் வெளியீடு...அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

மாணவர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி; 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை ஜூன் மாதம் வெளியீடு...அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு உத்தரவை அடுத்து உடனடியாக பிளஸ் 1 வகுப்புக்கான 3 பாடங்களுக்கான தேர்வுகள், பத்தாம் வகுப்புக்கான அனைத்து தேர்வுகளும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால் தேர்வுகள் நடப்பது கேள்விக்குறியானது.

இதுபோல தேர்வுகளை நடத்தாமல் இருக்க முடியாது என்பதால் பத்தாம் வகுப்பு தேர்வை ஜூன் 3வது வாரத்தில் நடத்தலாம் என்று அரசுத் தேர்வுத்துறை எண்ணியுள்ளது. இந்த தேர்வுக்கான அட்டவணை மே மாத இறுதியில் வெளியிடவும்  முடிவு செய்துள்ளது. மார்ச் மாதம் 26ம் தேதி நடக்க இருந்த பிளஸ் 1 தேர்வு (3 தேர்வுகள்), மார்ச் 23ம் தேதி நடத்த பிளஸ் 2 தேர்வில் எழுத முடியாமல் போனவர்கள் ஆகியோருக்கும் ஜூன் மாதம் தேர்வு நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ஜூன் மாதத்தில் அட்டவணை தயாரிக்க   திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் குறைந்தவுடன் ஜூன் மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும், கல்வி தொலைக்காட்சி  மூலமும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive