தேசிய அளவிலான திறனாய்வு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த சென்னை பள்ளி மாணவர்!

தேசிய அளவிலான திறனாய்வு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த சென்னை பள்ளி மாணவர்!

என்டிஎஸ்இ எனப்படும் தேசிய அளவிலான திறனாய்வு போட்டியில் சென்னை ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியை சேர்ந்த நி ஷோக் என்ற மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.

இது குறித்து பள்ளி வெளியிட்டுள்ள அறிக்கையில் "தேசிய அளவிலான திறனாய்வு தேர்வு மமுடிவுகள் நேற்று வெளியாகின. இதில் தமிழ்நாடு அளவில் சைதன்யா பள்ளி மாணவர் இரா. நி ஷோக் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவர் 200-க்கு 179 மதிப்பெண்கள் பெற்று சாதனை பிடித்துள்ளார்.

இதுகுறித்து மாணவர் நிஷாக் கூறுகையில் பெற்றோர்கள், பள்ளி முதல்வர் ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கமும் ஆலோசனையும் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. மேலும் பள்ளியின் சிறப்பு பயிற்சி வகுப்புகள் மற்றும் பள்ளி தேர்வுகள் நான் மாநில அளவில் முதலிடம் எடுக்க காரணம் என்றார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive