வரி விதிப்பதில் மத்திய அரசு சாதனை!
வருவாய் இழப்பை ஈடுசெய்ய, செவ்வாய்க்கிழமை இரவு முதல், பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ .10 ஆகவும், டீசலுக்கு லிட்டருக்கு 13 ஆகவும் உயர்த்தியுள்ளது மத்திய அரசு. இந்த வரி மாற்றம் மே 6 முதல் நடைமுறைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.அதே நேரம், இதில் வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி உள்ளது.
வரி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விற்பனை விலையை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதுதான் அந்த நல்ல செய்தி. ஏனெனில், விலை உயர்வை, எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளும். எரிபொருளின் சில்லறை விலைகளை அதிகரிக்காது.
இந்த வரி ஏற்றத்திலிருந்து கிடைக்கும் வருவாய், உள்கட்டமைப்பு மற்றும் பிற செலவீனங்களுக்கு பயன்படுத்தப்படும் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 1 ரூபாய் அதிகரிப்பது என்பது வழக்கமாக அரசிற்கு ஆண்டு வருமானத்தில் கூடுதலாக 14,500 கோடி ரூபாய் ஈட்டித் தரும். ஆனால் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக எரிபொருளுக்கான தேவை கணிசமாக குறைந்துவிட்டது. தேவை உயரும்போதுதான் வருவாய் கிடைக்கும்.
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பணம் இல்லாமல் இயங்கும் அரசுகள் உள்ள நமது நாட்டில், பெட்ரோல், டீசல் மற்றும் மதுபான வரியை உயர்த்தி வருவாய் பார்ப்பதுதான், ஒரே வழி என்று கூறுகிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.
0 Comments:
Post a Comment