சுகாதார நடவடிக்கையாக ஒவ்வொருவரும் முகக் கவசம் அணியுங்கள்

சுகாதார நடவடிக்கையாக ஒவ்வொருவரும் முகக் கவசம் அணியுங்கள்


இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி
(தமிழ்நாடு கிளை) திருச்சிராப்பள்ளி தலைவர் ராஜசேகர் அறிவுறுத்தல்

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சி தலைவர் ராஜசேகர், இளங்கோவன் முன்னிலையில் ,
முக கவசங்களை ஆயுட்கால உறுப்பினர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சங்கர் உள்ளிட்டோரிடம் முக கவசம் வழங்கினார்.
கொரொனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அரசு வகுத்துள்ள அறிவுறுத்தலை அனைவரும் பின்பற்ற வேண்டும். யாருக்கேனும் காய்ச்சல், இருமல், மற்றும் சளி, உடல் சோர்வு,மூச்சுத் திணறல் ஏற்பட்டால் மருத்துவமனைக்குச் சென்று உடல் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் .
இருமும் போதும், தும்மும் போதும், கைக்குட்டைகள் வைத்துக் கொள்ளவேண்டும். தினமும் 10 முதல் 15 முறை கைகளை கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும். சமச்சீரான ஆகாரங்களை உண்ண வேண்டும். ஒவ்வொருவரும் சுகாதார நடவடிக்கையாக முக கவசம் அணிய வேண்டும் என்றார்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive