அகவிலைப்படி உயர்வு ரத்து செய்வதன் மூலம் அரசுக்கு சேமிப்பு எவ்வளவு தெரியுமா? - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, April 23, 2020

அகவிலைப்படி உயர்வு ரத்து செய்வதன் மூலம் அரசுக்கு சேமிப்பு எவ்வளவு தெரியுமா?

அகவிலைப்படி உயர்வு ரத்து செய்வதன் மூலம் அரசுக்கு சேமிப்பு எவ்வளவு தெரியுமா?

உயிர்க்கொல்லி நோயான கொரோனா இந்தி யாவை ஆட்டிப் படைக்கிறது. கொரோனா பாதிப்பின் காரணமாக நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால், அத்தியாவசிய பணிகள் தவிர அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன. இதனால் மத்திய, மாநில அரசுகளுக்கு வரிவருவாய் குறைந்து, கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக ஏராளமான பணம் செலவிட வேண்டி உள்ளது.இதனால், நிதி ஆதாரத்தை பெருக்கும் வகையில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள மத்திய அரசு, சமீபத்தில் எம்.பி.க்களின் சம்பளத்தை குறைத்ததோடு, அவர்களுக்கு வழங்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியையும் ரத்து செய்து இருக்கிறது.அகவிலைப்படி உயர்வு ரத்துஇந்த நிலையில், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.பொதுவாக மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் புதிய அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருவது வழக்கம். அதாவது ஏப்ரல் மாதம் முதல் திருத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வுடன் கூடிய சம்பளமும், ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான அகவிலைப்படி நிலுவைத் தொகையும் சேர்த்து வழங்கப்படும்.கடந்த மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக வருகிற ஜூலை 1-ந் தேதி முதல் 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி வரை அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு ரத்து செய்து உள்ளது.

நிதி அமைச்சகம் அறிக்கைஇதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் அறிவிக்கப்பட்ட கூடுதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படமாட்டாது. இதேபோல் வருகிற ஜூலை 1-ந் தேதி முதல் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை கூடுதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படமாட்டாது. கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட 4 சதவீத அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.என்றாலும் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி தொடர்ந்து வழங்கப்படும்.நிலுவைத் தொகைமீண்டும் 2021-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு வழங்க அரசு முடிவு செய்யும் போது, 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் 2021-ம் ஆண்டு ஜனவரி வரையிலான காலகட்டத்துக்கான திருத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு சேர்த்து வழங்கப்படும்.

ஆனால் 2020 ஜனவரி 1-ந் தேதி முதல் 2021 ஜூன் 30-ந் தேதி வரையிலான காலகட்டத்துக்கான நிலுவைத்தொகை வழங்கப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சேமிப்பு எவ்வளவு?

அகவிலைப்படி உயர்வு ரத்து செய்யப்பட்டு இருப்பதன் மூலம் இந்த நிதி ஆண்டிலும், 2021-2022-ம் நிதி ஆண்டிலும் மத்திய அரசு ரூ.37 ஆயிரத்து 530 கோடி சேமிக்க முடியும்.அகவிலைப்படி உயர்வு வழங்கும் விஷயத்தில் மாநில அரசுகள் மத்திய அரசை பின்பற்றி செயல்படும். அப்படி மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் தங்கள் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைக்கும் பட்சத்தில் ரூ.82 ஆயிரத்து 566 கோடி சேமிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Post Top Ad