நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்கும் முத்திரைகள் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, April 13, 2020

நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்கும் முத்திரைகள்

நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்கும் முத்திரைகள்


சூன்ய முத்திரை செய்முறை
நிமிர்ந்து அமரவும். மூச்சோட்டத்தை ஒரு நிமிடம் கூர்ந்து கவனிக்கவும். பின் நடுவிரலை மடக்கி அதன் நுனி உள்ளங்கையில் தொடட்டும் அதன் மையத்தில் பெருவிரலை வைத்து சிறிய அழுத்தம் கொடுக்கவும். இரு கையிலும் இவ்வாறு செய்யவும். (படத்தைப் பார்க்க). இரண்டு நிமிடங்கள் இருக்கவும். இதயம்,சிறுகுடல், இதயமேலுறை மிக நல்ல பிராண ஆற்றல் பெற்று இயங்கும். நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.
பிரிதிவிமுத்திரை – செய்முறை
நிமிர்ந்து அமரவும். மூச்சோட்டத்தை ஒரு நிமிடம் கூர்ந்து தியானிக்கவும். பின் கண்ணை திறந்து மோதிரவிரல் பெருவிரல் நுனியை தொட்டு ஒரு சிறிய அழுத்தம் கொடுக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் இருக்கவும். மண்ணீரல், இரப்பை நல்ல சக்தி பெற்று இயங்கும். நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.
வாயு முத்திரை
நிமிர்ந்து உட்காரவும். கண்களை மூடி ஒரு நிமிடம் இயல் பாக நடக்கும் மூச்சோட்டத்தை கூர்ந்து தியானிக் கவும். கண்களை திறந்து ஆள்காட்டி விரலை மடக்கி அதன் மையத்தை கட்டை விரலை வைத்து ஒரு சிறிய அழுத்தம் கொடுக்கவும். இரண்டு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் இருக்கவும். நுரையீரல் இயக்கம் நன்றாக இருக்கும். நல்ல நோய் எதிர்பாற்றல் கிடைக்கும்.
சுத்தப்படுத்தும் முத்திரை
நிமிர்ந்து உட்காரவும். கண்களை மூடி ஒரு நிமிடம் இயல் பாக நடக்கும் மூச்சோட்டத்தை கூர்ந்து கவனிக் கவும். எல்லா விரல்களையும் சேர்த்து வைக்கவும். பெருவிரலினால் மோதிரவிரலின் முதல் பகுதியில் சிறிய அழுத்தம் கொடுக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் இருக்கவும். சிறுகுடல், பெருங்குடல் நன்கு சக்தி பெற்று இயங்கும். நோய் எதிர்பாற்றல் கிடைக்கும். கழிவுகள் குடலில் தங்காது. அதனால் உடலில் ஜீரண மண்டலம் நன்றாக இயங்கும்.
பிராண முத்திரை செய்முறை
நிமிர்ந்து உட்காரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி ஒரு நிமிடம் மூச்சோட்டத்தை கூர்ந்து கவனிக்கவும். கண்களை திறக்கவும் – மோதிர விரல் சுண்டுவிரல் மடக்கி அதன் மையத்தில் பெரு விரல் நுனியை தொட்டு ஒரு சிறிய அழுத்தம் கொடுக்கவும். இரண்டு நிமிடங்கள் இருக்கவும். சிறுநீரகம், சிறுநீரகப்பை மிக நன்றாக இயங்கும். நோய் எதிர்பாற்றல் கிடைக்கும்.
ஆகாய முத்திரை
நிமிர்ந்து அமரவும். கண்களை மூடி ஒரு நிமிடம் மூச்சோட்டத்தை கூர்ந்து கவனிக்கவும். கண்களை திறக்கவும் நடு விரல் நுனியையும் கட்டை விரல் நுனி யையும் தொடவும். இரு கைகளிலும் செய்ய வேண்டும். இரண்டு நிமிடங்கள் இருக்கவும். கல்லீரல், பித்தப்பை நன்கு சக்தி பெற்று இயங்கும். நோய் எதிர்பாற்றல் கிடைக்கும்.
மேற்குறிப்பிட்ட ஆறுமுத்திரைகளை தினமும் காலை, மாலை பயிற்சி செய்யுங்கள். நமது உடலில் இதயம், சிறுகுடல், மண்ணீரல், இரைப்பை, நுரையீரல், பெருங்குடல், சிறுநீரகம், சிறுநீரகப்பை, கல்லீரல், பித்தப்பை மிகச் சக்தி பெற்று இயங்கும். அதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். எந்த ஒரு வைரஸ்சும் தாக்காது.

Post Top Ad