டயாலிசிஸ் நோயாளிகளை கொரோனா தாக்கலாம்

'டயாலிசிஸ் நோயாளிகளை கொரோனா தாக்கலாம்
புதுடில்லி : 'சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, 'டயாலிசிஸ்' எனப்படும், ரத்தத்தை சுத்தப்படுத்தும் சிகிச்சை பெறுவோருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால், அதை எதிர்கொள்ள தகுந்த வசதிகளை செய்ய வேண்டும்' என, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.கொரோனா தொடர்பாக, மாநில அரசுகளுக்கு, மத்திய சுகாதார அமைச்சகம், புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ் பாதிப்பு, வயதானவர்கள் மற்றும் பல்வேறு நோய்கள் உள்ளவர்களை தாக்கக் கூடிய அபாயம் அதிகம் உள்ளது. குறிப்பாக, டயாலிசிஸ் செய்து கொள்ளும் நோயாளிகளுக்கு, இந்த வைரஸ் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. மேலும், உயிர் பலி ஏற்படவும் அதிகசாத்தியம் உள்ளது. அதனால், ஏற்கனவே டயாலிசிஸ் செய்து கொள்ளும் நோயாளிகளுக்கு, கொரோனா குறித்தும், அதன் அறிகுறிகள் குறித்தும் தெரிவிக்க வேண்டும்.இது தொடர்பான விளம்பரங்கள் மருத்துவமனையில் இடம்பெற வேண்டும். டயாலிசிஸ் செய்யவரும் நோயாளிகளுக்கு, கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகளை செய்ய வேண்டும்.இவ்வாறு டயாலிசிஸ் செய்யும் நோயாளிகளுக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான கருவிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவ ஊழியர்களுக்கும், அதற்கான பயிற்சி அளிக்க வேண்டும். இது போன்றவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஒரு மையத்தை, மாநிலங்கள் தேர்வு செய்து வைக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive