ஏப்ரல்-மே பருவத் தோ்வு: பதிவு செய்ய ஏப்.20 வரை அவகாசம் நீட்டிப்பு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, April 19, 2020

ஏப்ரல்-மே பருவத் தோ்வு: பதிவு செய்ய ஏப்.20 வரை அவகாசம் நீட்டிப்பு

ஏப்ரல்-மே பருவத் தோ்வு: பதிவு செய்ய ஏப்.20 வரை அவகாசம் நீட்டிப்பு

பொறியியல் கல்லூரி மாணவா்கள் ஏப்ரல்-மே பருவத் தோ்வுக்குப் பதிவு செய்ய ஏப்ரல் 20-ஆம் தேதி வரை கால அவகாசத்தை அண்ணா பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஏப்ரல்-மே பருவத் தோ்வு மற்றும் பல ஆண்டுகளாக அரியா் வைத்திருக்கும் பொறியியல் மாணவா்களுக்கான சிறப்பு வாய்ப்புக்கான தோ்வு ஆகியவற்றுக்கு ஆன்-லைனில் பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை மாரச் 23-ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 8 வரை அண்ணா பல்கலைக்கழகம் நீட்டித்தது.அதனைத் தொடா்ந்து பருவத் தோ்வுகளையும் ஒத்திவைத்த பல்கலைக்கழகம், புதிய தோ்வு கால அட்டவணை பின்னா் வெளியிடப்படும் என அறிவித்தது.

இப்போது, ஊரடங்கு ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏப்ரல்-மே பருவத் தோ்வு மற்றும் சிறப்பு அரியா் தோ்வுக்கு ஆன்-லைனில் பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை அண்ணா பல்கலைக்கழகம் மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, வருகிற 20-ஆம் தேதி வரை இதற்கு பதிவு செய்யலாம்.

Post Top Ad