ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம் ஒவ்வொரு மாதமும் வருகிற 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஓர் ஆண்டுக்கு பிடித்தம் செய்யப்படும் -மத்திய வருவாய் துறை - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, April 18, 2020

ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம் ஒவ்வொரு மாதமும் வருகிற 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஓர் ஆண்டுக்கு பிடித்தம் செய்யப்படும் -மத்திய வருவாய் துறை

ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம் ஒவ்வொரு மாதமும் வருகிற 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஓர் ஆண்டுக்கு பிடித்தம் செய்யப்படும் -மத்திய வருவாய் துறை
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி வருகிற மே மாதம் 3ஆம் தேதி வரை நீட்டித்துள்ளார். இதன் காரணமாக இந்தியா முழுவதும் அத்தியாவசியப் பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணியும் நடக்கவில்லை. இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. பெருமளவில் பணத்தேவைகளும் ஏற்பட்டுள்ளது. அதுதவிர, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மத்திய அரசு, பொதுமக்கள் உள்ளிட்ட விருப்பப்படும் யார் வேண்டுமானாலும் கொரோனா சிகிச்சை மற்றும் மருத்துவ கட்டமைப்புக்கான நிதியுதவி வழங்கலாம் என அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரிய பிரதமர் மோடி, தங்களால் இயன்ற பண உதவிகளை செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், தனி நிதியம் ஒன்றையும் அமைத்துள்ளார்.

Prime Minister's Citizen Assistance and Relief in Emergency Situations Fund -PM Cares Fund என்கிற அந்த நிதியத்தின் பெயரில் நிதி பெறுவதற்கான வங்கிக் கணக்கும் துவங்கப்பட்டுள்ளது. இதற்கு நிதியளிப்பவர்களுக்கு வருமான விலக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள், சாமானியர்கள், அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை செய்து வருகின்றனர். அதுதவிர, அரசு அலுவலர்கள் தங்களது ஒரு மாத ஊதியம்,

ஒரு நாள் ஊதியத்தை வழங்கி தங்களது பங்களிப்பை செய்து வருகின்றனர். எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதி, ஊதியம் உள்ளிட்டவற்றை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் பொருட்டு, அதிகாரிகள், ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம் ஒவ்வொரு மாதமும் வருகிற 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஓர் ஆண்டுக்கு பிடித்தம் செய்யப்படும் என மத்திய வருவாய் துறை அறிவித்துள்ளது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் வருகிற 20ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் எனவும் மத்திய வருவாய் துறை அறிவுறுத்தியுள்ளது.

Post Top Ad