பல்வேறு துறை மாநில அரசு ஊழியர்கள் ஏப்.20ம் தேதி வேலைக்கு திரும்ப வேண்டும் - தமிழக அரசு உத்தரவு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, April 16, 2020

பல்வேறு துறை மாநில அரசு ஊழியர்கள் ஏப்.20ம் தேதி வேலைக்கு திரும்ப வேண்டும் - தமிழக அரசு உத்தரவு

பல்வேறு துறை மாநில அரசு ஊழியர்கள் ஏப்.20ம் தேதி வேலைக்கு திரும்ப வேண்டும் - தமிழக அரசு உத்தரவு


வணிக வரித்துறை உட்பட பல்வேறு துறையை சேர்ந்த மாநில அரசு ஊழியர்கள் ஏப்.20ம் தேதி வேலைக்கு திரும்ப வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் ரயில், பஸ் என பொதுபோக்குவரத்து ஏதுமில்லாத நிலையில் எப்படி வேலைக்கு வந்து செல்ல முடியும் என்று ஊழியர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதனால் அரசு நிர்வாகம் இடியாப்ப சிக்கலில் சிக்கி தவிக்கிறது. 

கொரோனா பீதி காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு தொடங்குவதற்கு முன்ேப பெரு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய பணித்தது. அதே நேரத்தில் ஊரடங்கு தொடங்கியதும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் வேலைக்கு செல்லவில்லை.



அத்தியாவசிய பணியில் உள்ள மாநகராட்சி, நகராட்சி உள்ளாட்சித்துறை, வருவாய் ஊழியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள், மருத்துவமனை, மின்வாரிய ஊழியர்கள், குடிநீர் வழங்கல் துறை ஊழியர்கள், தீயணைப்பு,  வங்கி பணியாளர்கள், அஞ்சலக ஊழியர்கள் ஆகியோர் மட்டும் தினமும் வேலை செய்கின்றனர். அதே நேரத்தில் அலுவலக பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் வேலைக்கு வரவில்லை. 

சமூக விலகல், தனிமை படுத்தப்பட்ட பகுதி,  பஸ், ரயில் என பொது போக்குவரத்து இல்லாதது, சாலையில் போலீசார் வாகனங்களை அனுமதிக்காதது என பல்வேறு காரணங்களால் ஊழியர்கள் பணிக்கு வர முடியாத நிலைமை உள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சக அலுவலகங்கள் குறைந்தபட்ச ஊழியர்களுடன் செயல்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.



அதனையடுத்து ஏப்.13ம் தேதி முதல் அமைச்சக அலுவலகங்கள் சுழற்சி முறையில் தினமும் 30சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற தொடங்கினர். இந்நிலையில் ஊரடங்கு மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில், ‘மக்கள் நலன் கருதி மாநில, மாநில பிரதேச அரசுகள் ஏப்.20 முதல் சூழ்நிலைக்கு ஏற்ப சில தளர்வுகளை, மாற்றங்களை மேற்கொள்ளலாம். ஆனால் அரசுத் துறைகளாக இருந்தாலும், தொழிற்சாலைகளாக இருந்தாலும் பணியாற்றும் இடங்களில் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அதே நேரத்தில் தொற்று உள்ள இடங்களில் ஊரடங்கை கடுமையாக கடைபிடிக்க வேணடும்’ என்று கூறியுள்ளது.

மேலும் அந்த உத்தரவில் ‘மாநில அரசின் மற்ற துறைகளில் குரூப் ஏ, பி அதிகாரிகள் 100 சதவீத்தினர்  வேலைக்கு வர வேண்டும். குரூப் சி, டி ஊழியர்கள் சுழற்சி முறையில் தினமும் 33 சதவீத ஊழியர்கள் ேவலைக்கு வரவேண்டும்’ என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அடுத்து தமிழக அரசு ஊழியர்கள்  சுழற்சி முறையில் வேலைக்கு வர வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தலைமை செயலகம், சமூக நலத்துறை, வேளாண்மை துறை,  வணிக வரி உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் தங்கள் துறையினருக்கு ஏப்.20ம் தேதி முதல் வேலைக்கு வரவேண்டும் என்று தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். எனவே ஏப்.30 முதல் மாநில முழுவதும் உள்ள அரசு அலுவலங்கள் குறைந்தபட்ச ஊழியர்களுடன் செயல்பட தொடங்கும்.



வேலைக்கு வரும் 33 சதவீத ஊழியர்கள் அடுத்த 2 நாட்களுக்கு வேலைக்கு வரத் தேவையில்லை. ஆக வாரத்தில் 2நாட்கள் இவர்கள் வேலைக்கு வரவேண்டி இருக்கும்.
எப்படி வருவார்கள்: கொரோனா தொற்று பிரச்னை இல்லாத இடத்தில் குறைந்தபட்ச ஊழியர்களுடன் மாநில அரசு அலுவலகங்கள் செயல்பட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மே 3ம் தேதி வரை ரயில், பஸ் என பொது போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால் எப்படி வேலைக்கு வந்துச் செல்ல முடியும் என்று  ஊழியர்கள்  தங்கள் அதிகாரிகளிடம் கேட்கின்றனர். அதிகாரிகளோ, ‘அரசு உத்தரவு வேலைக்கு வந்தாக வேண்டும்’ என்று முடித்துக் கொள்கிறார்களாம்.  

சொந்த வண்டி வைத்திருப்பவர்கள் போலீஸ் கெடுபிடியை மீறி எப்படி வேலைக்கு வந்து செல்ல முடியும் என்பது பிரச்னை. அதுமட்டுமல்ல ஊரடங்கு அறிவித்ததும் பலர் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். வாடகை, சொந்த வீடு என பல்வேறு காரணங்களுக்காக ஊழியர்கள் பலரும் அலுவலகத்தில் இருந்து பல கிமீ தள்ளி புறநகர்களில் வசிக்கின்றனர். இவர்கள் எல்லாம் எப்படி வேலைக்கு வந்து செல்ல முடியும் என்ற கேள்விகள் எழுகின்றன. அதற்கெல்லாம் தமிழக அரசு  ஏப்.20ம் தேதிக்குள் என்ன பதில் சொல்லப்போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.



ஏன் வணிக வரி?
கொரோனா தொற்று நடவடிக்கைகளுக்கு போதுமான நிதி இல்லாமல் தமிழக அரசு தடுமாறி வருகிறது. மத்திய அரசும் போதுமான நிதியை தமிழகத்துக்கு ஒதுக்கவில்லை. தமிழக பிரபலங்கள், தொழிலதிபர்கள் பலரும் மத்திய அரசுக்கு நிதி அளிக்க காட்டும் ஆர்வத்தை, தமிழக அரசுக்கு அளிக்க காட்டுவதில்லை. எனவே ஜிஎஸ்டி வரி வருவாயில் மாநிலத்தின் பங்கை தமிழகத்துக்கு தரும்படி தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் தமிழகத்தின் பங்கை முழுமையாக வழங்கவில்லை.

எனவே மத்திய அரசிடம் வலியுறுத்த வசதியாக இதுவரை செலுத்திய வரியில் துல்லியமாக கணக்கீடு செய்யும்படி வணிகவரித்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் தமிழகத்தின் பங்கை வட்டம், மாவட்டம் வாரியாக துல்லியமாக கணக்கீடு செய்து தர வணிக வரிதுறைத் ஊழியர்கள் உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Post Top Ad