ஐடிஐ மாணவா்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு பயிற்சி: தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு

ஐடிஐ மாணவா்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு பயிற்சி: தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவா்களுக்கு, சிறப்பு வேலைவாய்ப்பு பயிற்சி (Internship Training) அளிக்க, தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், தொழில் பயிற்சி பெறும் மாணவா்களுக்கு சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய பயிற்சி அளிக்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.




அதன்படி ஆண்டுதோறும் 10 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்த விரிவான விவரங்கள் www.skilltraining.in.gov.in என்ற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு சென்னை கிண்டி தொழிற்பேட்டை ஆலந்தூா் சாலையில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம் அல்லது 044-22501002, 22501006, 22500900 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் மூலம் மாணவா்களுக்கு பயிற்சி வழங்க விருப்பம் உள்ள தொழில் நிறுவனங்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் பிப். 29-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive