தொடங்கியது தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, February 4, 2020

தொடங்கியது தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு

தொடங்கியது தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு!!

திரண்ட பக்தர்கள்.. பல்லாயிரம் பேர்.. !
தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் குடமுழுக்கு தொடங்கி நடந்து வருகிறது. இதனால் பெரிய கோவில் எனப்படும் பெருவுடையார் கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வந்து வருகிறார்கள்.
சோழ மன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது பெரியகோவில்.

 1000 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட [பெரிய கோவில் ஆகும் இது. பெருவுடையார் கோவில் என்று அழைக்கப்பட்டு வந்த இந்த கோவில் மராட்டிய மன்னர்களால் பிருகதீசுவரம் என்று அழைக்கப்பட்டது.

இந்த நிலையில் தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் குடமுழுக்கு தொடங்கி நடந்து வருகிறது. இதனால் பெரிய கோவில் எனப்படும் பெருவுடையார் கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வந்து வருகிறார்கள்.

8வது யாகசாலை பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. அதன்பின் மகாபூர்ணஹதி பூஜை, ஹோமம் நடைபெறும். பல மாவட்டங்களில் இருந்து குடமுழுக்கு விழாவை காண மக்கள் வருகை புரிந்துள்ளனர்.

காலை 9.30 மணிக்கு விமானத்திற்கு குடமுழுக்கு நடக்கிறது. காலை 10 மணிக்கு மூலவருக்கு குடமுழுக்கு நடைபெறுகிறது.தமிழிலும் சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு நடைபெறுகிறது. பெரும் சர்ச்சைகளுக்கு இடையில் இரண்டு மொழியில் குடமுழுக்கு நடக்கிறது.

23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சையில் குடமுழுக்கு நடக்கிறது. இதனால் இந்த விழா அதிக முக்கியத்துவம் பெறுகிறது. காலை 10 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறும்.

பெருவுடையார் விமானமான தஞ்சை பெரிய கோபுரத்திற்கும் பின்னர் பரிவார மூர்த்திகளுக்கும் குடமுழுக்கு நடைபெறும். இந்த விழாவில் இது மிகவும் முக்கியமான நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலில் 9 கோபுரங்கள் உள்ளது. இதில் ஒரு கோபுரம் ராஜ கோபுரம் ஆகும்.

மாலை 6 மணிக்கு பெருவுடையாருக்கு பேரபிஷேகம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து நிறைவாக இரவு 8 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.

Post Top Ad