சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

கடந்த ஜனவரி 24ஆம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று https://www.annauniv.eduஇணையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த வேலைவாய்ப்பின் படி டீச்சிங், புரோபஷனல் அசிஸ்டெண்ட் 1, அப்ளிகேஷன் புரோகிராமர் ஆகிய பி.டெக், பி.இ, எம்எஸ்சி தகுதியிலான பதவிகளும், பிளம்பர், கார்பெண்டர் பதவிகளுக்கும் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் பணிகள்:
ஆசிரியர் பணிக்கு மொத்தம் 12 பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்காலிக பணியாகும். தகவல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், கணிதம் ஆகிய துறைகளில் காலியிடங்கள் உள்ளது.
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் அந்தந்த துறையில் இளநிலை, முதுநிலை இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும். கணிதத்துறை விண்ணப்பதாரர்கள் முதுநிலை பட்டப்படிப்பு, எம்.பில் படித்திருக்க வேண்டும்.
ஆசிரியர் அல்லாத பணிகள் :
புரேபஷனல் அசிஸ்டெண்ட் - 1, புரோபஷனல் அசிஸ்டெண்ட் III, பியூன், கிளரிக்கல் அசிஸ்டெண்ட், கார்பெண்டர், எலக்ட்ரீசியன் ஆகிய ஆசிரியர் அல்லாத பணிகள் ஆகும்.
கல்வித் தகுதி :
பியூன், எலெக்ட்ரிசீயன், கார்பெண்டர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சியும், ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
புரொபஷனல் அசிஸ்டெண்ட் 1 பணிக்கு B.E (CSE / IT) படிப்பு, புரோபஷனல் அசிஸ்டெண்ட் III பணிக்கு ECE டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இந்த பணிகளுக்கான சம்பளம் தினக்கூலி அடிப்படையில் வழங்கப்படுகிறது.
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை தறவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
The Dean,
College of Engineering, Guindy Campus,
Anna University,
Chennai - 600 025.
இந்த வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://www.annauniv.edu/more.phpபார்த்து தெரிந்து கொள்ளவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.02.2020
0 Comments:
Post a Comment