முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 1,500பேருக்கு பணி நியமன ஆணை முதல்வர் பழனிசாமி வழங்கினார்

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 1,500பேருக்கு பணி நியமன ஆணை முதல்வர் பழனிசாமி வழங்கினார் .

தமிழகத்தில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக் காக தேர்வு செய்யப்பட்ட 1,503 முதுகலை பட்டதாரி ஆசிரியர் களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர்பழனிசாமி வழங்கினார்.

அரசு மற்றும் நகராட்சி மேல் நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரி யர் காலிப் பணியிடங்களை நிரப்பு வதற்காக கடந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் 27 , 28, 29 ஆகிய 3 நாட்கள் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்ட 1,503 பேருக்கு கடந்த 9,10-ம் தேதிகளில்அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் கல்வி மேலாண்மை தகவல் மையம் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் முது கலை பட்டதாரி ஆசிரியர் பணி யிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 1,503 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இதை தொடங்கிவைக்கும் வகையில் சென்னை கிரீன்வேஸ் சாலை யில் உள்ள தனது முகாம் அலு வலகத்தில் 9 பேருக்கு நியமன ஆணைகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழ் நாடு பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி, பள்ளிக்கல்வித் துறை செயலர் தீரஜ்குமார், ஒருங் கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குநர் ஆர்.சுடலைக்கண்ணன், பள்ளிக்கல்வித் துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் க.லதா ஆகியோர் பங்கேற்றனர்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive