சட்ட படிப்பு: 8ம் தேதி கவுன்சிலிங்
அரசு சட்ட கல்லுாரிகளில், எல்.எல்.பி., ஐந்தாண்டு படிப்புக்கு, &'கட் - ஆப்&' மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியலை, தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை, நேற்று முன்தினம் வெளியிட்டது. இந்த பட்டியலின் படி, மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீடு இல்லாத பொதுப் பிரிவுக்கு, வரும், 8ம் தேதி கவுன்சிலிங் நடக்கிறது. பட்டியலினத்தவருக்கு, 9ம் தேதி; மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் முஸ்லிம்களுக்கு, 10ம் தேதி; பிற்படுத்தப்பட்டோருக்கு, ஜூலை, 11ம் தேதி கவுன்சிலிங் நடத்தப்படும் என, சட்ட பல்கலை அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment