ஆகஸ்ட் 2019ஆம் மாதத்திற்கான சம்பளம் வழங்க ஊதிய கொடுப்பாணை ( Psy Authorization) வழங்க ஆணை வெளியீடு.



பள்ளிக்கல்வி - தற்காலிக பணியிடங்கள் 2011 - 12 ஆம் ஆண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதலாக ஒப்பளிக்கப்பட்ட 1590 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதலாக ஒப்பளிக்கப்பட்ட 6872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆக மொத்தம் 8462 தற்காலிக பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 2019 ஆம் மாதத்திற்கான சம்பளம் வழங்க ஊதிய கொடுப்பாணை வழங்க ஆணை வெளியீடு.

Download - Pay Authorization...


TNPSC Group 4 Exam - GT, GE & GS Model Question Paper

TNPSC Group 4 Exam - GT, GE & GS Model Question Paper

Latest - TNPSC Group 1,2,2A, 4 VAO Exam - Useful Study Materials


* TNPSC Group 4 Exam - GT & GS Model Question Paper (1)


| Kalam - Tamil Medium Download Here

* TNPSC Group 4 Exam - GT & GS Model Question Paper (2) | Kalam - Tamil Medium Download Here

* TNPSC Group 4 Exam - GE & GS Model Question Paper (1) | Kalam - English Medium Download Here

* TNPSC Group 4 Exam - GE & GS Model Question Paper (2) | Kalam - English Medium Download Here

பிளஸ் 1 தேர்வு மறுமதிப்பீடு: இன்று, 'ரிசல்ட்'

சென்னை, பிளஸ் 1 துணை தேர்வின் மறுமதிப்பீடு முடிவு, இன்று வெளியாகிறது.இது குறித்து, அரசு தேர்வு துறை இயக்குனர், உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிளஸ் 1 பொது தேர்வுக்கான, சிறப்பு துணை தேர்வு ஜூனில் நடந்தது. இதில், பங்கேற்றவர்களில் சிலர், தேர்வு முடிவுக்கு பின், மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தனர். அவர்களுக்கான திருத்த முடிவு, இன்று பகல், 2:00 மணிக்கு பின், scan.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.பதிவு எண் உள்ளோர் மட்டும், திருத்திய மதிப்பெண்ணுக்கான தற்காலிக மதிப்பெண் பட்டியலை, http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இசை ஆசிரியர்கள் பணிக்கு புதிய பட்டியல்

சென்னை, உடற்கல்வியியல், ஓவியம், தையல், இசை ஆகிய, சிறப்பு பாடங்களில், 1,325 காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம், 2017, செப்., 23ல் போட்டி தேர்வை நடத்தியது. தேர்வு முடிவுகள், 2018 ஜூனில் வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின், பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின், இறுதி பட்டியல், அக்டோபரில் வெளியானது.ஆனால், இந்த முடிவுகளில் குளறுபடி உள்ளதாக, தேர்வர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது; நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. வழக்கு முடிவுக்கு வந்ததால், அடுத்த கட்ட நடவடிக்கையை, ஆசிரியர் தேர்வு வாரியம் துவங்கியுள்ளது.முதற்கட்டமாக, இசை ஆசிரியர்கள் பணியில், 86 காலியிடங்களை நிரப்ப, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முடிவுகள், ரத்து செய்யப்பட்டுள்ளன. மாறாக, புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், முதல் பட்டியலில் இடம் பெற்ற பலரது பெயர்கள் விடுபட்டுள்ளதாக, குற்றம் சாட்டப்பட்டுள்ளது

செப்டம்பர் 1ம் முதல் வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை வாக்காளர்களே ஆன்லைனில் செய்துகொள்ளலாம்

செப்டம்பர் 1ம் முதல் வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை வாக்காளர்களே ஆன்லைனில் செய்துகொள்ளலாம்

    

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய வரும் செப்டம்பர் 1ம் முதல் 30ம் தேதி வரை திருத்த தமிழக தேர்தல் அறிவிப்பு.
மேலும் வாக்காளர்களுக்கு புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதன் படி வாக்காளர்கள் பெயர் முகவரி புகைப்படம் போன்ற வாக்காளர்கள் தங்களே இணையதளத்தில் திருத்தம் மேற்கொள்ள NVSP பதிய வசதியுடன் கூடிய இணையதளம் ஏற்படுத்தியுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தமிழக தேர்தல் ஆணையர் கூறுகின்றனர்.

பணி மாறிச் செல்லும் தலைமையாசிரியருக்க கண்கலங்கும் மாணவர்களும் ஆசிரியர்களும் - பத்திரிகைச் செய்தி

பணி மாறிச் செல்லும் தலைமையாசிரியருக்க கண்கலங்கும் மாணவர்களும் ஆசிரியர்களும் - பத்திரிகைச் செய்தி

    



பணிக்கொடை வழங்குவது குறித்தும், பங்களிப்பு தொகையை உயர்த்தி வழங்குவது குறித்து பரிசீலனை

பணிக்கொடை வழங்குவது குறித்தும், பங்களிப்பு தொகையை உயர்த்தி வழங்குவது குறித்து பரிசீலனை

  



பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், ஓய்வூதியம் அளிப்பது குறித்து, விதிகள் உருவாக்கப்படவில்லை' என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிந்துள்ளது. தமிழகத்தில், 2003 ஏப்., 1க்கு பின், பணியில் சேர்ந்த, அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்பின், பணியில் சேர்ந்த, 5 லட்சத்து, 42 ஆயிரம் அரசு ஊழியர்களில், ஓய்வு பெற்றவர்கள், பணியின் போது, இறந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.

இது குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், திண்டுக்கல்லைச் சேர்ந்த ஆசிரியர் ஏங்கல்ஸ் கேள்விகள் கேட்டிருந்தார். இதற்கு அரசு அளித்த பதில்: பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், ஓய்வூதியம் வழங்குவது குறித்த விதிகள் உருவாக்கப்படவில்லை. பணிக்கொடை வழங்குவது குறித்தும், பங்களிப்பு தொகையை, 2019 ஏப்., 1 முதல், 10 சதவீதத்தில் இருந்து, 14 சதவீதமாக உயர்த்தி வழங்குவது குறித்தும், பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஏங்கல்ஸ் கூறியதாவது:


பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து, தமிழக அரசால் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு, அறிக்கையை அரசிடம் வழங்கி, 10 மாதங்கள் ஆகின்றன. அரசு எந்த முடிவும் எடுக்காமல், காலம் தாழ்த்துவது, அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2016 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அளித்த வாக்குறுதிப்படி, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஒரே தலைமையாசிரியர் அரசின் முடிவால் ஏற்பட இருக்கும் பாதிப்புகள்

ஒரே தலைமையாசிரியர் அரசின் முடிவால் ஏற்பட இருக்கும் பாதிப்புகள்

    


தமிழக அரசானது பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு புதிய மாற்றங்களை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. தற்சமயம் புதிதாக ஒரு அறிவிப்பினை தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அறிவித்துள்ளார் ஒரே பள்ளியின்  கீழ் அனைத்து பள்ளிகளிலும் ஒன்றிணைக்கும் புதிய உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளார். தொடக்கப் பள்ளி நடுநிலைப் பள்ளி  உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியின் கீழே ஒன்றிணைக்க கூடிய இந்த புதிய அறிவிப்பானது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரே நிர்வாகத்தின் கீழ் அனைத்து பள்ளிகளையும் ஒன்றிணைக்கும் இந்த முயற்சி சிறந்த ஒரு முயற்சியாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டாலும், நிர்வாகம் என்னும் வளையத்தின் கீழ் அனைத்து பள்ளிகளிலும் ஒன்று நினைக்கும் பொழுது பள்ளியின் செயல்பாட்டை ஒரு தொய்வு ஏற்படுத்தும் என ஆசிரியர்கள் கருதுகின்றனர். 


தமிழக அரசின் கருத்தானது "ஆரம்பப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் பட்சத்தில் அப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வசதி வாய்ப்புகளை ஆரம்பப் பள்ளி மாணவர்கள் பெறும் பொழுது அவர்களுடைய கல்வித்தரம் உயரும் என கூறப்பட்டுள்ளது". ஆனால், ஆசிரியர்கள் இது சாத்தியமே இல்லை என கூறுகின்றனர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள ஆய்வகங்கள் அந்தந்த வகுப்பு மாணவர்கள் மட்டுமே முழுமையாக பயன்படுத்த இயலும். அப்படி இருக்கும் பட்சத்தில் ஆரம்பப் பள்ளி மாணவர்கள் எவ்வாறு அந்த ஆய்வகங்களை பயன்படுத்துவார்கள். மேலும் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி யில் உள்ள ஆய்வக வசதியானது அந்த மாணவர்களுக்கு முழுமையாக பயன்படுத்த வசதி இல்லாத சூழ்நிலையில் இவர்கள் எவ்வாறு பயன்படுத்துவார்கள் என வினவுகின்றனர். 

இதுகுறித்து ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச் செயலாளர் பாலச்சந்தர் கூறுகையில் “தொடக்க கல்வித் துறை என்பது கல்வியின் அடிப்படையைக் கற்றுக் கொடுக்கக்கூடிய இடமாகும். அதற்காகத்தான் தொடக்கக் கல்வித் துறைக்காகத் தனியாக நிர்வாகக் கட்டமைப்புகள் வேண்டும் என ஏற்கெனவே பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதன் மூலமாகவும், போராட்டங்கள் நடத்தியதன் வாயிலாகவும்தான் தற்போது அது தனியாகச் செயல்பட்டு வருகிறது. ஒருவேளை, அதில் ஏதாவது குறைபாடுகள் இருக்கும்பட்சத்தில் அரசு அதில் தலையிட்டு தீர்வுகாணாமல், அடிப்படைக் கல்வியைச் சீரழிக்க வேண்டும் என்பதற்காகவே, 'ஒரே தலைமை ஆசிரியர்' என்ற இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதுபோல் இருக்கிறது, அரசாங்கத்தின் செயல்பாடுகள்.

இது தொடர்ந்தால் தமிழகத்தில் தொடக்கக் கல்வி என்பதே அழிவை நோக்கியதாகத்தான் நகரும். எனவே, தொடக்கக் கல்வித் துறைக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்திதான் தற்போது நாங்களும் பல்வேறு போராட்டங்களை அறிவித்துள்ளோம். இந்நிலையில் இந்தத் திட்டத்தை இப்போது நடைமுறைப்படுத்துவதால் எந்த நன்மையும் கிடைக்காது. பல தீமைகள்தான் ஏற்படும்.

இதுதொடர்பாக தற்போது வெளியாகியுள்ள அரசாணையில் நன்மையாக என்ன சொல்லப்பட்டுள்ளது என்றால், ஓர் ஈராசிரியர் பள்ளி இருந்தால் அங்கு தலைமையாசிரியரும் உடன் மற்ற ஆசிரியரும் செயல்பட்டு வருவார்கள். இந்தப் பள்ளிகளில் ஒருவேளை தலைமை ஆசிரியர் அலுவல் காரணமாக வெளியே போகும்பட்சத்தில் அப்போது மாணவர்களின் வகுப்புகள் பாதிக்கப்படும். எனவே, அந்தப் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க இந்தப் புதிய நிர்வாக மாற்றத்தின்மூலம் அந்த இடத்துக்கு மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஆசிரியர்களை நியமிக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இது மாதிரியாக மேல்நிலைப் பள்ளி ஆசிரியரைத் தொடக்கப் பள்ளி மாணவர்களைப் பார்த்துக்கொள்ள நியமிப்பதால், அதில் எந்தப் பயனும் கிடையாது. ஏனெனில், மேல்நிலைப் பள்ளிகளுக்குக் கற்பிக்கும் முறை வேறு; தொடக்கப் பள்ளிகளுக்குக் கற்பிக்கும் முறை வேறு என்பதை உணர்தல் வேண்டும்.


மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களால் தொடக்கப் பள்ளி மாணவர்களைப் பேசாமல் அமைதியாகப் பார்த்துக்கொள்ள முடியுமே தவிர, அவர்களுக்குப் பாடத்தை நடத்த இயலாது. கடந்த 10 ஆண்டுகளாகக் கல்வி என்பது கீழ்த்தரமான நிலையை நோக்கித்தான் சென்றுகொண்டிருக்கிறது. இது தொடர்ந்தால், தமிழகம் பழைய மாதிரி கல்வியறிவு இல்லாத மாநிலமாகத்தான் மாறும்” என்றார்.கல்விப் பிரச்னைகளுக்கான தீர்வுகளைக் காண வேண்டியது அரசின் கடமை. இல்லையேல், பாதிக்கப்படப்போவது என்னவோ ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிதான்

ஓய்வூதிய விதிகள் ஒண்ணுமே இல்லை' தகவல் சட்டத்தில் தமிழக அரசு ஒப்புதல்

ஓய்வூதிய விதிகள் ஒண்ணுமே இல்லை' தகவல் சட்டத்தில் தமிழக அரசு ஒப்புதல்


பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், ஓய்வூதியம் அளிப்பது குறித்து, விதிகள் உருவாக்கப்படவில்லை' என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிந்துள்ளது. தமிழகத்தில், 2003 ஏப்., 1க்கு பின், பணியில் சேர்ந்த, அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்பின், பணியில் சேர்ந்த, 5 லட்சத்து, 42 ஆயிரம் அரசு ஊழியர்களில், ஓய்வு பெற்றவர்கள், பணியின் போது, இறந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.

இது குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், திண்டுக்கல்லைச் சேர்ந்த ஆசிரியர் ஏங்கல்ஸ் கேள்விகள் கேட்டிருந்தார். இதற்கு அரசு அளித்த பதில்: பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், ஓய்வூதியம் வழங்குவது குறித்த விதிகள் உருவாக்கப்படவில்லை. பணிக்கொடை வழங்குவது குறித்தும், பங்களிப்பு தொகையை, 2019 ஏப்., 1 முதல், 10 சதவீதத்தில் இருந்து, 14 சதவீதமாக உயர்த்தி வழங்குவது குறித்தும், பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஏங்கல்ஸ் கூறியதாவது:

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து, தமிழக அரசால் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு, அறிக்கையை அரசிடம் வழங்கி, 10 மாதங்கள் ஆகின்றன. அரசு எந்த முடிவும் எடுக்காமல், காலம் தாழ்த்துவது, அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2016 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அளித்த வாக்குறுதிப்படி, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நாளை ( 30.08.2019) உபரி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் மாறுதல் கலந்தாய்வு!

நாளை ( 30.08.2019) உபரி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் மாறுதல் கலந்தாய்வு!


தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின் படி 01.08.2018 நிலவரப்படி மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்டு உபரி இடைநிலை ஆசிரியர்களின் பணி நிரவல் கலந்தாய்வு நாளை நடைபெறவுள்ளது.

தொடர்புடைய இடைநிலை ஆசிரியர்களை குறிப்பிட்ட நேரத்தில் பணிநிரவல் கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

7 மாவட்ட ஆரம்பப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை - பள்ளிக் கல்வித்துறை

7 மாவட்ட ஆரம்பப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை - பள்ளிக் கல்வித்துறை


தமிழகத்தில் 7 மாவட்டங்களில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக அரசு ஆரம்பப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

இதற்காக அங்கன்வாடி மையத்திற்கு ஒரு இடைநிலை ஆசிரியர் வீதம் 2,381 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஜூன் 3-ம் தேதி முதல் தொடங்கிய மழலையர் வகுப்புகளில் 65,000 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், கோவை, திருப்பூர், திருச்சி,கரூர், பெரம்பலூர், விருதுநகர், நாமக்கல் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள ஆரம்பப் பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை இல்லை என தெரியவந்துள்ளது.

ஏற்கனவே, 46 அரசு துவக்கப் பள்ளிகள் மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தால் நூலகமாக மாற்றப்பட்டுள்ள நிலையில், நேற்று வரை தொடக்க கல்வித்துறை நடத்திய கணக்கெடுப்பில் 7 மாவட்டங்களில் ஆரம்ப பள்ளிகளில் மழலையர் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஆண்ட்ராய்டு செல்போன் - அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்

அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஆண்ட்ராய்டு செல்போன் - அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்



1058 அங்கன்வாடி பணியாளர்களுக்கு 90 லட்சம் மதிப்பிலான ஆண்ட்ராய்டு செல்போன் கரூரில் போக்குவரத்துறை அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் அங்கன்வாடி பணியாளர்களுக்கு செல்போன் வழங்கினார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் துறையின் சார்பில் 1058 அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூபாய் 90 லட்சம் மதிப்பில் ஆண்ட்ராய்டு செல்போன் வழங்கி போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் சிறப்புரையாற்றினார். 

மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் விழாவில் செல்போனை வழங்கிய பின்னர் போக்குவரத்துறை அமைச்சர் சிறப்புரையாற்றினார். அப்போது அங்கன்வாடி பணியாளர்கள் ஒவ்வொரு கிராமம் கிராமமாகச் சென்று குழந்தைகள் வளர்ச்சி பற்றி அறிந்து வர வேண்டும். அவர்களது வேலைப்பளுவை குறைக்க வேண்டும் என்பதற்காக மத்திய மாநில அரசுகள் இணைந்து கொண்டுவரப்பட்ட திட்டம் தான் இந்த ஆண்ட்ராய்டு செல்போன் வழங்கும் திட்டம் 

ரூபாய் 8000 மதிப்புள்ள இந்த ஆண்ட்ராய்ட் போனை நாங்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். மேலும், தமிழகம் இந்தியாவிலேயே அனைத்து துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக உள்ளது.குறிப்பாக இன் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் இந்தியாவிலேயே மிக மிக குறைவாக உள்ளது என்றும்., இதேபோல போக்குவரத்து துறை சுகாதாரத் துறையும் இந்திய முன்னணி மாநிலமாக உள்ளது உலக அளவில் இளைஞர்கள் அதிகம் கொண்ட இந்தியா தமிழகம் உள்ளது

ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமான வரி செலுத்துவோருக்கு பெரும் நிம்மதி புதிய ஸ்லாப் பரிந்துரை



ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமான வரி செலுத்துவோருக்கு பெரும் நிம்மதி புதிய ஸ்லாப் பரிந்துரை

ஆண்டுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமான வரி செலுத்துவோருக்கு பெரும் நிவாரணமாக புதிய வருமான அடுக்குகளை நேரடி வரி தொடர்பான பணிக்குழு பரிந்துரைத்து உள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 29,  2019 12:10 PM
புதுடெல்லி

ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருவாய் உள்ளவர்களுக்கு, வருமான வரி விகிதத்தை 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைப்பது, வரி விதிப்பு அடுக்குகளை நான்கில் இருந்து 5ஆக உயர்த்துவது உள்ளிட்ட பரிந்துரைகளை,  நேரடி வரி விதிப்பு முறை தொடர்பான ஆய்வுக்குழு மத்திய அரசுக்கு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதுள்ள வருமான வரிச் சட்டத்தை மறுஆய்வுக்கு உட்படுத்தி, நாட்டின் பொருளாதாரத் தேவைக்கு ஏற்ப, புதிய சட்டத்தை இயற்றுவது குறித்து பரிந்துரைப்பதற்காக, நேரடி வரி தொடர்பான பணிக்குழு கடந்த 2017ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த ஆய்வுக்குழு, கடந்த வாரத்தில் மத்திய அரசுக்கு தாக்கல் செய்த அறிக்கையில், வருமான வரி விதிப்பு அடுக்குகளை நான்கிலிருந்து ஐந்தாக உயர்த்தவும், சில அடுக்குகளுக்கு வருமான வரி விகிதத்தை குறைக்குமாறும் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு 2.5 லட்ச ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு, வருமான வரி விதிக்கப்படுவதில்லை. இந்த முதல் அடுக்கில் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது, 2.5 லட்ச ரூபாய் முதல் 5 லட்ச ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு, 5 சதவீத வருமான வரி விதிக்கப்படுகிறது.

இந்த இரண்டாவது அடுக்கை, 2.5 லட்ச ரூபாயில் இருந்து 10 லட்ச ரூபாய் வரை விரிவுபடுத்துமாறும், வருமான வரி விகிதத்தை 10 சதவீதமாக நிர்ணயிக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அடுக்கிற்கு 10 சதவீத வரி விகிதம் நிர்ணயித்தாலும், 5 லட்ச ரூபாய் வரை, ஏற்கெனவே உள்ள வரிக் கழிவுகளை  முழுமையாக அளிக்குமாறும், இதன் மூலம் 5 லட்ச ரூபாய் வரை ஈட்டுபவர்களுக்கு வரி செலுத்த வேண்டியதில்லை என்ற நிலையை ஏற்படுத்துமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

5 லட்ச ரூபாயிலிருந்து 10 லட்ச ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு தற்போது 20 சதவீத வரி விதிக்கப்படும் நிலையில், அதை 10 சதவீதமாக மாற்றுமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த அடுக்கின் உயர்பிரிவில் உள்ள ஒவ்வொரு தனிநபருக்கும் ஆண்டுக்கு 37 ஆயிரத்து 500 ரூபாய் மிச்சமாகும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

10 லட்ச ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுபவர்களுக்கு தற்போது 30 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதை மேலும் இரண்டு அடுக்குகளாக பிரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 10 லட்ச ரூபாய் முதல் 20 லட்ச ரூபாய் வரை வருவாய் ஈட்டுபவர்கள் என மூன்றாவது அடுக்கை ஏற்படுத்தி, வரி விதிப்பை 20 சதவீதமாகக் குறைக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மூன்றாவது அடுக்கில் உயர்பிரிவில் இருப்பவர்களுக்கு ஆண்டுக்கு 1 லட்ச ரூபாய் வரை மிச்சமாகும். இதற்கடுத்தபடியாக, 20 லட்ச ரூபாய் முதல் 2 கோடி ரூபாய்க்குள் வருமானம் உள்ளவர்களை 4ஆவது அடுக்காக நிர்ணயித்து 30 சதவீத வரியும், 2 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் வருமானம் உள்ளவர்களை 5ஆவது அடுக்காக நிர்ணயித்து 35 சதவீத வரியும் விதிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள முறையில் இவர்கள் அனைவரும் 30 சதவீத வரி செலுத்தும் நிலையில், 4 மற்றும் 5 என மேலும் இரண்டு அடுக்குகளாக பிரிக்கும்போது, 2 கோடி ரூபாய்க்குள் ஈட்டுபவர்களுக்கு ஆண்டுக்கு 8.5 லட்ச ரூபாய் மிச்சமாகும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இவை அனைத்தும் மேல் வரி விதிப்பை கணக்கில் எடுக்காமல் அளிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளாகும். தற்போது ஆண்டுக்கு 2.5 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுபவர்களுக்கு மேல் வரிகளையும் சேர்க்கும்போது, 42.7 சதவீத வரி விதிக்கப்படுகிறது. எனவே, ஆய்வுக் குழுவின் பரிந்துரைகள் ஒருவேளை ஏற்கப்பட்டால், அப்போது மேல் வரிகள் விதிக்கப்படுமா அல்லது நீக்கப்படுமா என்பதைப் பொறுத்தே வரி விகிதத்தின் அளவை கணக்கிட முடியும் என வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் இந்த பரிந்துரைகளை அரசு ஏற்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை என்பதை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். வரி விதிப்பின் மூலம் கிடைக்கும் வருவாயை விரிவுபடுத்துவதற்கான வழிகளை அரசு ஆராய்ந்து வரும் நிலையில், இந்த பரிந்துரைகளை அரசு ஏற்குமா என்பது சந்தேகமே என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால், வரி விதிப்பை சிறிய அளவில் குறைத்துக்கொண்டாலும், அந்த பணம் தனிநபரில் கையில் மீதமாகி, செலவிடப்படும்போது, பொருள்களுக்கான கிராக்கியை அதிகரிக்கும் என்றும், இது உற்பத்தியை அதிகரிக்கச் செய்து பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் என்றும் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த பரிந்துரைகளை அமல்படுத்தும்போது, நேரடியாக 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருமான வரி வருவாய் குறையும் என்றாலும், பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்போது அது இந்த இழப்பு மறைமுகமாக எளிதில் சரிக்கட்டி விடும் என வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வரி விகிதம் மிக அதிகமாக இருக்கும்போது, அரசுக்கான ஒட்டுமொத்த வரி வருவாயை குறைக்கும் என்பது, ரீகன் ஆட்சிக் காலத்தில் செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்த ஆர்ட் லாஃபர் என்ற அமெரிக்க பொருளாதார அறிஞரின் கருத்தாகும்.

வரி விகிதங்கள் அதிகமாக இருக்கும்போது, எவ்வளவு சம்பாதித்தாலும் அரசுக்கு வரி வடிவில் கட்ட வேண்டியிருக்கும் என்பதால், மேலும் மேலும் பொருளீட்ட வேண்டும் என்ற ஊக்கம் குறைந்துபோகும் என்று அவர் கூறுகிறார். மேலும் மேலும் சம்பாதிப்பது என்பதற்கு பதிலாக வருவாய் அளவோடு இருந்தாலும் தரமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் தனிநபர்களின் கவனம் சென்றுவிடும் என்றும், இது ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை பாதித்து, அரசின் வரி வருவாய் குறைவதற்கே வழிவகுக்கும் என்பது ஆர்ட் லாஃபரின் வாதமாகும். இந்த கருத்தையும் வல்லுநர்கள் சுட்டிக்காட்டி வருமான வரி விகிதத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

நேரடி வரி தொடர்பான பணிக்குழு தற்போதைய வருமான  வரி அடுக்கு

ரூ.2.5 லட்சம் வரை   வரி கிடையாது                      
ரூ.2.5 லட்சம் முதல் -  ரூ.5 லட்சம் வரை  வரிச்சலுகை    
ரூ.2.5 லட்சம் முதல் -  ரூ.10 லட்சம் வரை   10%   வரி              
ரூ.10. லட்சம் முதல்  - ரூ.20 லட்சம் வரை  20%  வரி
ரூ.20 லட்சம் முதல் - ரூ.2.கோடி வரை 30%   வரி            
ரூ.2 கோடிக்கு மேல் -    35 % வரி

தற்போதைய வருமான வரி அடுக்கு

ரூ.2.5 லட்சம் வரை  - வரி கிடையாது                      
ரூ.2.5 லட்சம் முதல் -  ரூ.5 லட்சம் வரை   5% வரி
ரூ.5 லட்சம் முதல் -  ரூ.10 லட்சம் வரை   20 %   + 12,500 வரி
ரூ.10. லட்சம்   மேல்   - 30 % + 1,12,500 வரி

Recent Posts

Total Pageviews

Code