TNPSC : மே - 2022 துறைத் தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியீடு




Tamil Nadu Public Service Commission has introduced One Time Registration from the Departmental Examinations December - 2019 . Hence , the candidates are required to furnish their particulars in Departmental One Time Registration before applying . Aadhaar Number details shall be linked with the Departmental One Time Registration , mandatorily . If there is any change with regard to details entered in the One Time Registration , such as name , initial , father's name , date of birth , working district , etc. , the same shall be updated in the One Time Registration before applying for Departmental Examinations - May 2022. After submitting the application , any subsequent claim , with regard to change of test code / centre , corrections in name , father's name , age , date of birth , etc. , will not be entertained . Hence , the candidates are instructed to submit the applications with utmost Care..

Candidates should mode only . Other mode of applications will not be accepted and they will be rejected , even though the cost of application is enclosed with them.

Name of the Examination : Departmental Examinations

Date of Notification : 04.04.2022

Date & Time of closing : 30.04.2022 till 11.59 P.M

TNPSC Department Exam may 2022 - Notification And Instructions - Download here

தேர்வுத்துறை அதிகாரிகள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை!


பள்ளித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வெளியாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 12ம் வகுப்புக்கான 2வது திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியான நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேர்வுத்துறை அதிகாரிகள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில், 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் குளறுபடிகளை தடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் முதன்மை செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், 12ம் வகுப்பு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இனி வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.ஜன்னல் இல்லாத அறைகளில் வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்.வினாத்தாள்கள் வைக்கப்பட்டு இருக்கும் 1,200 அறைகளுக்கும் காவலர்கள் நியமிக்கப்படுவது அவசியம். தேர்வு நேரத்தில் முறைகேடுகளை தடுக்க 3,050 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்படும்.

தேர்வில் காப்பியடிப்பதை அனுமதிக்க கூடாது என்பதில் கண்டிப்பாக இருக்குமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். வினாத்தாள் வெளியாக காரணமாக இருந்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும்.இன்று பிற்பகல் நடக்கும் தேர்வு வினாத்தாள் வெளியானதால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் தேர்வு நடைபெறும். வெளியான வினாத்தாளில் உள்ள எந்த கேள்வியும் நடைபெறும் தேர்வில் கேட்கப்படாது,என்றார்.

கல்வி தொலைக்காட்சியில் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்படும் தனியார் தொலைக்காட்சியின் விவரங்கள்!


அரசு போட்டித்தேர்வுகளுக்கு மாணவர்கள் தயார் செய்ய ஏதுவாக 20.03.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கல்வி தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டது . அத்துடன் ஊக்க உரைகள் , முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளை தினமும் முற்பகல் 7.00 மணியிலிருந்து 9.00 மணி வரையும் இதன் மறு ஒளிபரப்பு பிற்பகல் 7.00 மணியிலிருந்து 9.00 மணி வரையும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

கல்வி தொலைக்காட்சியில் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்படும் தனியார் தொலைக்காட்சியின் அலைவரிசை எண் குறித்த விவரங்கள் :




Recent Posts

Total Pageviews

Code