Breaking : ஆசிரியர்களுக்கான கற்றல் விளைவுகள் ( LO ) பயிற்சி ஒத்திவைப்பு! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, February 1, 2022

Breaking : ஆசிரியர்களுக்கான கற்றல் விளைவுகள் ( LO ) பயிற்சி ஒத்திவைப்பு!




பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகளின்படி , தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் கற்றல் அடைவுகள் சார்ந்த வலுவூட்டல் பயிற்சி 10.01.2022 முதல் வட்டாரத் தலைமையிடத்தில் தெரிவு உயர்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தில் ( Hi - Tech Lab ) நடைபெற்று வருகிறது . செய்யப்பட்ட இந்நிலையில் , தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி இணைய வழியாக வழங்கப்படவுள்ளது.
எனவே , 03.02.2022 முதல் நடைபெற உள்ள கற்றல் அடைவுகள் சார்ந்த வலுவூட்டல் பயிற்சியினை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது . பயிற்சி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad