சிறப்பு கையேடு தயாரித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு

சிறப்பு கையேடு தயாரித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு
மதுரையில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு தமிழ் தேர்வில்கல்வித்துறை தயாரித்த சிறப்பு கையேட்டில் இருந்து 68 மதிப்பெண்ணுக்கான வினாக்கள் இடம் பெற்றன. தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில் பத்தாம் வகுப்பில் சுமாராக படிக்கும் மாணவரை கண்டறிந்து அவர்கள் கற்கும் திறனுக்கு ஏற்ப சிறப்பு கையேடு தயாரிக்கப்பட்டது. 

இது அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இலவசமாக வழங்கப்பட்டன.புதிய பாடத்திட்டத்தின்படி வினாத்தாள் 'புளுபிரிண்ட்' தெரியாத நிலையில் தேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் தயாரிக்கப்பட்டது. செப்.,21ல் நடந்த தமிழ்த் தேர்வில் இக்கையேட்டில் இருந்து 100க்கு 68 மதிப்பெண்ணுக்கு வினாக்கள் கேட்கப்பட்டது. 

சி.இ.ஓ., சுவாமிநாதன் கூறுகையில் "சுமாராக படிக்கும் மாணவரும் 60 மதிப்பெண் பெறும் வகையில் கையேடு தயாரிக்கப்பட்டது. அரசு பள்ளிகளில் படித்த 25 சதவீதம் மாணவருக்கு வழங்கப்பட்டது. நல்ல பலன் கிடைத்துள்ளது. தயாரித்த ஆசிரியர் குழுவிற்குபாராட்டுக்கள்" என்றார்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive