உதட்டு வெடிப்பை குணமாக்கும் சித்த மருத்துவம்

உதட்டு வெடிப்பை குணமாக்கும் சித்த மருத்துவம்
தினமும் காலை மாலை இருவேளை பசும்பாலின் பாலேட்டை உதடுகளின் மீது தடவ வேண்டும். மேலும் கரும்பின் இலைகளைச் சுட்டு சாம்பலாக்கி அதனுடன் பசுமாட்டின் வெண்ணையைக் குழைத்து தடவ உதடு வெடிப்பு நீங்கும்.

நெல்லிக்காய்ச் சாற்றை அதன் சம அளவு தேனுடன் கலந்து தடவிவர நல்ல பலன் தெரியும். கேரட் சாறு, கிளசரின், பசும்பாலாடை ஆகிய மூன்றையும் கலந்து தடவ வேண்டும். இதன் மூலம் உதடு வெடிப்பு குணமாகும்.

காலை, மாலை வேளைகளில் ரோஜா இதழ்களைப் பால் விட்டு அரைத்து உதட்டில் பூசிவர வேண்டும். புண்ணாகிப்போன உதடுவெடிப்புகளுக்கு நல்லெண்ணெயையோ, நெய்யையோ தடவ அப்புண்கள் விரைவில் குணமாகும்.

எலுமிச்சையின் சாற்றை உதட்டுப்புண்கள் ஆறிய பிறகு தடவிவர பழைய நிறத்தையும், பளபளப்பையும் பெரும்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive