வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு சலுகையை அறிவித்த வங்கி..!

வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு சலுகையை அறிவித்த வங்கி..!
கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள வீட்டுகடன் தாரர்களுக்கு 24 மாத காலம் வரை தவணை அவகாசத்தை வழங்க பாரத ஸ்டேட் வங்கி முன்வந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

மற்றொரு வாய்ப்பாக கடன் தவணைகளை திருத்தி அமைத்து தவணை கால அவகாசத்திற்கு மிகாமல் தவணைகளை நீட்டித்து செலுத்தவும் அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் ஓன்றாம் தேதிக்கு முன்னர் பெறப்பட்ட வீட்டுக் கடன்களை, ஊரடங்கு காலத்திற்கு முன்னர் வரை ஒழுங்காக திருப்பி செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும் என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

அதேநேரம் கொரோனவால் தங்களது வருமானம் அல்லது பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நிரூபித்தால் மட்டுமே இந்த சலுகை கிடைக்கும் என பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive