வனத் துறை தேர்வு பணி மீண்டும் ஒத்திவைப்பு

வனத் துறை தேர்வு பணி மீண்டும் ஒத்திவைப்பு
தமிழகத்தில், வனக் காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான, 'ஆன்லைன்' தேர்வு, மார்ச், 8ல் நடந்தது. இத்தேர்வுக்கு பிந்தைய சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் திறன் தேர்வுகளை, ஏப்ரல், மே மாதங்களில் நடத்த திட்டமிட்டது.ஊரடங்கு காரணமாக, இந்நடவடிக்கைகள் ஒத்திவைக்கப் பட்டன. 

கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக, இப்பணிகளை துவங்குவது குறித்து, வனத் துறை ஆராய்ந்தது. தற்போதைய சூழல், இப்பணிகளை மேற்கொள்ள உகந்ததாக இருக்காது என, தெரிய வந்தது.

இதுதொடர்பாக, வனச் சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்ட அறிவிப்பு:

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் சிரமங்களை கருத்தில் வைத்து, தேர்வுக்கு பிந்தைய நடவடிக்கைகள், மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகின்றன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive